Subscribe to Gizbot

புதிய அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசெட்சி லேப்டாப் அறிமுகம்.!

Posted By: Jijo Gilbert

ஏஎம்டி-யின் எட்டு-கோர் ரைசன் 1700 செயலி மூலம் இயக்கப்படும் தொழில்துறையின் கேமிங்கிற்கான முதல் லேப்டாப் என்று அழைக்கப்படும் தயாரிப்பை இந்தியாவில் வெளியிடுவது குறித்து அசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி-க்கான முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த மாதம் (மார்ச்) 20 ஆம் தேதி முதல் இந்த லேப்டாப் வெளியிடப்படும் இந்த தயாரிப்பிற்கு, ரூ.1,34,990 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி லேப்டாப், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு 17.3 இன்ச் முழு ஹெச்டி ஐபிஎஸ் கண்களைக் கூசாத டிஸ்ப்ளே உடன் கூடிய ராடியான் ஃப்ரீசென்க் ஆதரவை கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பிற்கு ஆற்றலை அளிக்க, ரைசன் 7 1700 செயலி (எட்டு கோர்ஸ், 16 திரெட்ஸ்), ஏஎம்டி ராடியோன் ஆர்எக்ஸ்580 கிராஃபிக்ஸ் (விஆர்ஏஎம் இல் 4 ஜிபி) மற்றும் டிடிஆர்4 நினைவகத்தில் 16 ஜிபி (32 ஜிபி வரை விரிவுப்படுத்த முடியும்) காணப்படுகிறது. இந்த சாதனத்தில் 256ஜிபி எஸ்ஏடிஏ எஸ்எஸ்டி மற்றும் ஒரு 1டிபி ஹெச்டிடி அளிக்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டெக்னாலஜி

டெக்னாலஜி

இது தவிர, இந்த லேப்டாப்பில் வழக்கமான முறை, விவிட் முறை, கண் பாதுகாப்பு முறை மற்றும் கைமுறையான முறை என்ற நான்கு டிஸ்ப்ளே முறைகளில், ஒரே ஒரு கிளிக் மூலம் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும். மேலும் ஆர்ஓஜி அப்ளிகேஷன்களை எளிதாக அறிமுகம் செய்யவும் அமைப்புகள் மெனுவை அணுகவும் உதவும் ஒரு டேஸ்போர்டான ஆர்ஓஜி கேமிங் சென்டரை, ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி பெற்றுள்ளது. ஆர்ஓஜி கேம்ஃபஸ்ட் IV, எக்ஸ்ஸ்பிலிட் கேம்கேஸ்டர் மற்றும் அசஸ் ஸ்பிலிடிட் விஷவல் டெக்னாலஜி உள்ளிட்ட ஒருங்கிணைந்த அப்ளிகேஷன்களைச் செயல்படுத்தும் வகையில் இந்த டேஸ்போர்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

அசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி-யில் காணப்படும் ஒரு பேக்லிட் கீபோர்டை குறித்து அசஸ் நிறுவனம் கூறுகையில், ஒரே நேரத்தில் 30 கீக்களை அழுத்தினால் கூட, அதை சரியான முறையில் கிரகித்து கொண்டு கீ பயன்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு ஆன்டி-கோஸ்டிங் தொழில்நுட்பம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

ஹெட்போன்

ஹெட்போன்

இந்த லேப்டாப்பில் இணைப்பு தேர்வுகளைப் பொறுத்த வரை, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் 4.1, யூஎஸ்பி வகை-சி, யூஎஸ்பி 3.0, ஹெச்டிஎம்ஐ 2.0, 3.5மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. அதன் அளவீடுகளைப் பொறுத்த வரை, 415x280x340மிமீ என்ற அளவிலும், 3.2 கிலோ (பேட்டரி உடன்) எடையிலும் காணப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ரைசான்

ரைசான்

தனது ரைசான் 7 சிபியூ-க்களை ஏஎம்டி நிறுவனம் அறிமுகம் செய்து, ஒரு ஆண்டிற்கு மேலாகிறது. இதன்மூலம் முதல் தாங்கக் கூடிய மெயின்ஸ்ட்ரீம் ஆக்டா-கோர் செயலிகள் மூலம் நுகர்வோருக்கான டெஸ்க்டாப் பிசி சந்தையை தன்னிடமாக திருப்பி உள்ளது.

ஆர்ஓஜி

ஆர்ஓஜி

இந்த வெளியீட்டை குறித்து அசஸ் இந்தியா நிறுவனத்தின் தேசிய வணிக மேம்பாட்டு மேலாளர் (பிசி மற்றும் கேமிங்) அர்னால்டு சூ கூறுகையில், "ஏஎம்டி ரைசன் உடன் கூடிய ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜிஎல்702இசட்சி, கேமிங் ஹார்டுவேரை சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. ஏஎம்டி உடன் கைகோர்த்து, ஒரு மென்மையான மற்றும் ஒளிவு மறைவு இல்லாத இலவச கேமிங் அனுபவத்தை அளிக்கக்கூடிய, உலகின் முதல் மற்றும் அதிக சக்திவாய்ந்த 8 கோர் ஏஎம்டி அடிப்படையில் அமைந்த கேமிங் இயந்திரத்தை தயாரித்து வெளியிடுவதில், நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Asus ROG Strix GL702ZC Laptop With AMD Ryzen 7 Launched in India Price Specifications ; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot