இந்தியாவில் GL503, GX501 கேமிங் லேப்டாப்களை அறிமுகப்படுத்திய அசுஸ்.!
இவ்விரண்டு லேப்டாப்களிலும் 8ம் தலைமுறை இன்டெல் கோர் பிரசஸ்சர்களையும் நிவ்டியா ஜி.டி.எக்ஸ் கிராபிக்ஸ் வசதிகளையும் கொண்டுள்ளது.
அசுஸ் நிறுவனம் தனது ரிப்பளிக் ஆப் கேமர்ஸ் டேக்கின் கீழ் GL503 மற்றும் GX501 கேமிங் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விரண்டு லேப்டாப்களிலும் 8ம் தலைமுறை இன்டெல் கோர் பிரசஸ்சர்களையும் நிவ்டியா ஜி.டி.எக்ஸ் கிராபிக்ஸ் வசதிகளையும் கொண்டுள்ளது. இவற்றின் முன்பதிவு விற்பனைக்கான விலை ரூ109,990 லிருந்து துவங்குகிறது.

Asus ROG Strix GL503 லேப்டாப்பில் 8ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 ப்ராசஸ்சர் மற்றும் நிவ்டியா ஜி.டி.எக்ஸ் 1050Ti கிராபிக்ஸ் வசதியும் உள்ளது. மேலும் இதில் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக 16GB ரேம், 1TB FireCuda SSHD மற்றும் 256GB PCIe SSD சேமிப்புதிறன் உள்ளது. 120Hz ரெப்ரஸ் ரேட் உள்ள FHD TN பேனல் கொண்ட 15.6 இன்ச் திரையும் அதில் 400 நிட்ஸ் பிரைட்னஸ் திறனும் உள்ளது.
ஜிபிரஸ் (Zephyrus) எனப் பெயரிடப்பட்டுள்ள ROG GX501 லேப்டாப்பை உலகின் மிகவும் மெல்லிய லேப்டாப் என கூறுகிறது ஏசஸ் நிறுவனம். இதில் 8ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 ப்ராசஸ்சர் மற்றும் நிவ்டியா ஜி.டி.எக்ஸ் 1080 கிராபிக்ஸ் வசதியும் உள்ளது. இதன் அடர்த்தி வெறும் 17.9 மில்லிமீட்டர் தான். மேலும் இதில்144Hz ரெப்ரஸ் ரேட் உள்ள 15.6 இன்ச் FHD திரையும் அதில் ஸ்கீரின் கோஸ்டிங் தடுப்பு திறனும் உள்ளது. இணைப்புகளை பொறுத்தவரை, யூ.எஸ்.பி டைப் சி போர்ட்டும், தண்டர்போல்ட் 3 மற்றும் எச்.டி.எம்.ஐ 2.0 போர்ட் வசதியும் உள்ளது.
ROG Strix GL503 லேப்டாப்பின் விலை ரூ109,900 மற்றும் அதைவிட மெல்லிசான,செயல்திறன் அதிகமுள்ள GX501 லேப்டாப்பின் விலை ரூ299,990. இந்த இரண்டு கேமிங் லேப்டாப்களும், அனைத்து ஏசஸ் ஸ்டோர்களிலும், இந்தியாவில் குரோமா ஸ்டோர்களிலும் மற்றும் ஆன்லைனில் ப்ளிப்கார்டிலும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications