அசத்தலான அம்சங்களுடன் அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்கள்! விலை மற்றும் அம்சங்கள்.!

|

அசுஸ் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய அசுஸ் ஜென்புக் எஸ்13 எனும் பிரீமியம் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சிறந்த வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை கொண்டது அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப்.

 மொத்தம் மூன்று லேப்டாப்கள்

மொத்தம் மூன்று லேப்டாப்கள்

அதேபோல் அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் உடன் விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி மற்றும் விவோபுக் 16எக்ஸ் லேப்டாப் சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் சாதனங்கள் சற்று உயர்வான விலையில் அசத்தலான அம்சங்களடன் வெளிவந்துள்ளன. இப்போது அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய லேப்டாப்களின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப்

அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப்

அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் ஆனது 13.3-இன்ச் ஒஎல்இடி டச்ஸ்கீரின் பேனல் மற்றும் 2.8கே ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே
இந்த லேப்டாப் மாடல் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக இதன் வடிமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா?வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா?

அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் மென்பொருள் வசதி

அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் மென்பொருள் வசதி

சமீபத்திய AMD Ryzen 6000 U சீரிஸ் CPU மூலம் இந்த அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் இயங்குகிறது. குறிப்பாக இந்த சாதனத்தின் செயல்திறன் மிக அருமையாக இருக்கும். மேலும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் இரட்டை ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப்.எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

விவோபுக் 16எக்ஸ்

விவோபுக் 16எக்ஸ்

விவோபுக் 16எக்ஸ் எனும் லேப்டாப் ஆனது 16-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் AMD Ryzen 7 5800H கேமிங்-கிரேடு CPU மூலம் இயங்குகிறது இந்த புதிய லேப்டாப். அதேபோல் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி PCIe 3.0 ஸ்டோரேஜ் ஆதரைவக் கொண்டுள்ளது இந்த இந்த விவோபுக் 16எக்ஸ் மாடல்.

இந்த 13 நகரங்களில் வணிக ரீதியாக வந்து சேரும் 5G.. 4G விட 10 மடங்கு வேகத்தில் டாப் ஸ்பீட் இன்டர்நெட் விரைவில்..இந்த 13 நகரங்களில் வணிக ரீதியாக வந்து சேரும் 5G.. 4G விட 10 மடங்கு வேகத்தில் டாப் ஸ்பீட் இன்டர்நெட் விரைவில்..

பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

குறிப்பாக விவோபுக் 16எக்ஸ் ஆனது 50 WHr பேட்டரியைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும்உள்ளது. எனவே விரைவில் இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த சாதனத்தின் எடை 1.8 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த புதிய லேப்டாப் சாதனத்தில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

 விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி

விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி

விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி லேப்டாப் ஆனது 14-இன்ச் 2.8கே ஒஎல்இடி ஸ்கிரீன் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக டிஸ்பிளேஎச்டிஆர் ட்ரூ பிளாக் 600 மற்றும் டால்பி விஷன் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கேமிங் வசதிகளுக்கு இந்த லேப்டாப் மாடலை தேர்வு செய்வது நல்லது.

Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்

 தரமான மென்பொருள் வசதி

தரமான மென்பொருள் வசதி

இந்த புதிய விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி லேப்டாப் ஆனது AMD Ryzen 7 5800H CPU மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல்
16ஜிபி டிடிஆர்4 ரேம் மற்றும் 512ஜிபி PCIe Gen 3 ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். மேலும் 50WHr பேட்டரி ஆதரவு மற்றும் 90W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியும் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். எனவே 30 நிமிடங்களில் இந்த லேப்டாப் சாதனத்தை 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி சாதனத்தின் எடை 1.8 கிலோ.

ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

  • அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.99,990-ஆக உள்ளது.
  • விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி லேப்டாப் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.59,990-ஆக உள்ளது.
  • விவோபுக் 16எக்ஸ் லேப்டாப் சாதனத்தின் விலை ரூ.54,990-ஆக உள்ளது.
  • குறிப்பாக இந்த மூன்று புதிய லேப்டாப் மாடல்களுக்கும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

    மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
ASUS premium laptops Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X