ஸ்மார்ட் போனும் டேப்லட்டும் கலவையில் வரும் புதிய ஆசஸ் பேட்ஃபோன்

Posted By: Staff

ஸ்மார்ட் போனும் டேப்லட்டும் கலவையில் வரும் புதிய ஆசஸ் பேட்ஃபோன்
ஆசஸின் பேட்ஃபோன் விரைவில் இந்திய சந்தைக்கு வரவிருக்கிறது. ஆசஸின் நோக்கம் என்னவென்றால் டேப்லட் மூலம் போனை நிறைவு செய்வதாகும்.

இந்த டேப்லட்டின் திரை பற்றி தெரியவில்லை. ஆனால் இது 4.3 இன்ச் திரையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டேப்லட்டோடு இந்த பேட்போனை இணைக்கும் போது அதன் டிஸ்ப்ளேயின் அவுட்புட் 10.1 இன்ச்சாக மாறுகிறது.

அதனால் அதன் காட்சி மிகத் தெளிவாக இருக்கிறது. மேலும் இந்த பேட்ஃபோன் ஸ்பீக்கர்களும் பேட்டரியும் கொண்டு வருகின்றது. ஏற்கனவே இருந்தது போல் ஆசஸ் கார்மினின் ஒப்பந்த உரிமத்தோடு இதை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய டிவைசின் சிறப்பு அம்சங்கள் விரைவில் தைவான் கம்யூடெக்சில் தெரியவரும் என்று நம்பலாம்.

குறிப்பாக இந்த டேப்லட் காப்பர் மற்றும் கருப்பு நிறங்களில் வரும் என்று தெரிகிறது. இந்த டேப்லட்டின் மேல் கேமராவும் உள்ளது.

பேட்போனின் திரை தொடு வசதி கொண்டது. மேலும் இது லைட் சென்சார், மல்டி டச், ப்ராக்சிமிட்டி சென்சார் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு சாப்ட்வேரில் இயங்குகிறது. இதன் 5 மெகாபிக்ஸல் கேமரா டிஜிட்டல் சூம் வசதியை வழங்குகிறது.

மேலும் வீடியோ காலிங்கிற்காக துணை கேமராவும் இதில் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி மற்றும் மைக்ரோ எஸ்எச்டி உள்ளதால் இதன் சேமிப்பை அதிக அளவில் அதிகரிக்க முடியும். மேலும் பேட்ஃபோன் ப்ளூடூத், எச்டிஎம்ஐ மற்றும் வைபை போன்ற வசதிகளையும் வழங்குகிறது.

அதுபோல் 3.5எம்எம் ஹெட்செட்டை இணைக்கும் வசதியும் உள்ளது. இதன் நெட்வொர்க் ப்ரீக்வன்சி 850, 900, 1800 மற்றும் 1900 ஆகும். இதன் ஜிஎஸ்எம் நெட்வொர்க் தொழில் நுட்பம் டிடிஎம்எ மூலம் டிஜிட்டல் செல்லுலாரை பயன்படுத்த உதவுகிறது. மேலும் இது யுஎம்டிஎசுடன் இயங்குகிறது. மேலும் இதில் எஸ்எம்எம் மற்றும் இமெயிலும் அனுப்பலாம்.

இந்த ஆசஸ் பேட்ஃபோன் ஸ்மார்ட்போனோடு டேப்லட்டை இணைக்கிறது. இது மொபைல் தொழில் நுட்பத்தில் புதுமையான ஒன்றாகும். அதனால் இது கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இதன் விலை பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot