இந்தியாவில் தனது பேட்போனைக் களமிறக்கி இருக்கும் ஆசஸ்

இந்த பேட்போன் அடிப்படையில் ஒரு அன்ட்ராய்டு ஐசிஎஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 டூவல் கோர் ப்ராசஸருடன் வருகிறது. அதோடு இந்த போன் ஸ்மர்ட்போனுக்கான டோக்கிங் ஸ்லாட் மற்றும் பேட்போன் ஸ்டேசனுடன் வருகிறது.
இந்த டோக்கிங் ஸ்லாட் இந்த போனை ஒரு 10.1 இன்ச் டேப்லெட்டாக மாற்றித் தரும். மேலும் இந்த போனில் ஒரு முழு கீபோர்டு உள்ளது. எனவே இந்த போனில் லேப்டப்பில் வேலை செய்வது போல் வேலை செய்யலாம்.
இந்த போன் 4.3 இன்ச் அளவு டிஸ்ப்ளே, 8எம்பி பின்பக்க கேமரா, விஜிஏ முகப்பு கேமரா, 1ஜிபி மெமரி, 3ஜி வசதி, வைபை, மற்றும் ஜிபிஎஸ் வசதி போன்ற எல்லா தொழில் நுட்பங்களையும் வழங்குகிறது.
இந்த பேட்போன் ஸ்டேசன் 10.1 இன்ச் டிஸ்ப்ளே, 1.3எம்பி முகப்பு கேமரா, 8எம்பி பின்பக்க கேமரா, யுஎஸ்பி போர்ட் மற்றும் மெமரி கார்டு ரீடர் போன்ற வசதிகளுடன் வருகிறது.
ஆசஸின் இந்த சாதனத்தை ஸ்மார்ட் போனாகவோ, டேப்லெட்டாகவோ அல்லது லேப்டாப்பாகவோ பயன்படுத்தலாம். இந்த சாதனம் பல புதிய சாப்ட்வர்களையும் கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த சாதனம் இந்திய ரசிகர்களைக் கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications