ஆரம்பமே அதிரடி தான் போங்க : ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் அறிமுகம்.!

By Prakash
|

குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 மொபைல் பிசி மேடையில் இயங்கும் முதல் விண்டோஸ் 2-இன்- 1 லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஆசுஸ் நிறுவனம், இந்த ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் பொதுவாக பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு வெளிவந்துள்ளது.

ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் பொறுத்தவரை இந்திய கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் சாதனம்.

ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப்:

ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப்:

ஆசுஸ் நோவாகோ 2-இன்- 1 லேப்டாப் முதலில் இத்தாலி, ஜெர்மனி, சீனா, தைவான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிடைக்கும்,
இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி தெரிவிக்கப்படவில்லை.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

இந்த ஆசுஸ் நோவாகோ சாதனம் முக்கிய சிறப்பம்சமாக ஜிகாபிட் எல்டிஇ இணைப்பு ஆதரவு உள்ளது, இது ஸ்மார்ட்போன்களை போலவே,
லேப்டாப் தானாகவே வைஃபை மற்றும் எல்டிஇ நெட்வொர்க்குகள் மாறிக்கொண்டே இருக்கும்.

 ஸ்னாப்ட்ராகன் எக்ஸ்16 எல்டிஇ:

ஸ்னாப்ட்ராகன் எக்ஸ்16 எல்டிஇ:

ஆசுஸ் நோவாகோ லேப்டாப் ஸ்னாப்டிராகன் எக்ஸ்16 எல்டிஇ மோடம் உடன் 1ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகத்தை ஆதரிக்கிறது.
அதன்பின்பு 150எம்பிபிஎஸ் அப்லோடு வேகத்தை ஆதரிக்கிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஆசுஸ் நோவாகோ சாதனம் பொறுத்தவரை 13.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 178 °வைடு தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.மேலும் 8GB ரேம் , மற்றும் UFS 2.0 சேமிப்பு 256GB வரை வழங்கப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதனம் பொறுத்தவரை 22மணி நேரம் பேட்டரி பேக் ஆதரவு இடம்பெற்றுள்ளது, மேலும் 2-இன் 1 சாதனத்தில்Connected Standby, பேட்டரி-சேமிப்பு செயல்பாட்டை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இந்த சாதனம் விண்டோஸ் 10 இல் இயங்குகிறது, மேலும் எச்டிஎம்ஐ, இசிம், யுஎஸ்பி 3.1, நனோ சிம், 4ஜி எல்டிஇ, போன்ற பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

விலை:

விலை:

ஆசுஸ் நோவாகோ லேப்டாப் விலைப் பொறுத்தவரை 599டாலர்கள் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Asus NovaGo 2 in 1 laptop with Qualcomm Snapdragon 835 mobile PC platform announced ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X