Home
Computer

அசத்த வரும் ஆசஸின் புதிய மெமோ டேப்லெட்!

By Karthikeyan
அசத்த வரும் ஆசஸின் புதிய மெமோ டேப்லெட்!

கடந்த வாரம் நடைபெற்ற லாஸ் வேகாஸ் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் ஆசஸ் நிறுவனம் தனது புதிய பல டிவைஸ்களை அறிமுகப்படுத்தியது. ஆசஸின் முக்கிய கவனம் எல்லாம் அதன் டேப்லெட்டுகள் மீதே இருந்தன. அந்த வகையில் ஆசஸ் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய டேப்லெட்டின் பெயர் ஆசஸ் மிமொ 171 ஆகும்.

இந்த மெமோ 171 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் இந்த டேப்லெட் 7 இன்ச் அளவில் சூப்பரான திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரை ஐபிஎஸ்+ பேனல் கொண்டுள்ளது. அதுபோல் இந்த திரையை 178 டிகிரி கோணத்தில்கூட மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த மெமோ 171 டேப்லெட்டின் டூவல் கோர் ப்ராசஸர் 1.2 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ரேம் 1ஜிபி ஆகும். மேலும் இதன் இன்டர்னல் மெமரி 1ஜிபி ஆகும். அதுபோல் இந்த டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது.

இந்த டேப்லட் மிக மெல்லிய மற்றும் அடக்கமான டிவைஸ் ஆகும். இதன் டிசைனும் அட்டகாசமாக இருக்கிறது. உள்ளங்கையில் மிக அடக்கமாக இருக்கும். இந்த டேப்லெட்டின் முன்புறம் திரை மற்றும் வீடியோ காலிங் கேமரா இருக்கும். இந்த டேப்லெட் கருப்பு மற்றும் சில்வர் நிறம் கலந்து வருகின்றது. அதுபோல் இந்த டேப்லெட்டின் பின்புறம் உச்சியில் ஒரு கேமரா இருக்கும். அதற்கு கீழ் ஆசஸின் முத்திரை இருக்கும்.

இந்த மெமோ டேப்லெட் சக்தி வாய்ந்த ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நீண்ட காலத்திற்கு சூப்பராக இயங்கும். இதன் திரையும் துல்லியமாக இருக்கும். அதுபோல் தொடு வசதியும் இதில் மிக அபாரமாக இருக்கும்.

இந்த ஆசஸ் மெமோ 171 டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் போட்டி அதிகமாக இருப்பதால் இதன் விலை சற்று குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. முதலில் இந்த டேப்லெட் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படும். பின் படிப்படியாக உலகம் முழுதும் சந்தைப்படுத்தப்படும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X