Home
Computer

டேப்லெட் உலகைத் தன்வசப்படுத்தும் ஆசஸ் மெமோ 171 டேப்லெட்!

By Karthikeyan
டேப்லெட் உலகைத் தன்வசப்படுத்தும் ஆசஸ் மெமோ 171 டேப்லெட்!

ஆசஸ் இஇஇ பேட் மெமோ 171 டேப்லெட்டைப் பற்றிய அறிவிப்பு வந்ததும் டேப்லெட் துறையே இந்த டேப்லெட்டைத் திரும்பி பார்த்தது. மேலும் இந்த டேப்லெட்தான் இப்போது தலைப்புச் செய்தியாகவும் இருக்கிறது. ஏனெனில் இந்த டிசைன், தரம் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவை மிகவும் அம்சமாக உள்ளன.

இந்த ஆசஸ் இஇஇபேட் டேப்லெட் ஏராளமான முக்கிய அம்சங்களைக் கொண்டு இருக்கின்றன. முதலில் இதன் டிஸ்ப்ளேயைப் பார்த்தால் அது ஒரு சூப்பர் ஐபிஎஸ்+ மற்றும் எல்இடி பேக்லிட் வசதி கொண்ட டிஸ்ப்ளேயாகும். இந்த டிஸ்ப்ளே 7 இன்ச் அளவில் வந்து 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. மேலும் இந்த டிஸ்ப்ளே கொரில்லா கண்ணாடியால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக இதன் முக்கிய கேமரா 5 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் வீடியோ பதிவு மற்றும் ஆட்டோ போக்கஸ் போன்ற வசதிகளும் உண்டு. இதன் துணை கேரா 1.3 மெகா பிக்சல்களைக் கொண்டுள்ளது. மேலும் இதன் இன்டர்னல் மெமரி 16ஜிபி ஆகும். இதன் ரேம் 1ஜிபி ஆகும். மேலும் எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக இந்த மெமரியை விரிவுபடுத்த முடியும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் ப்ளூடூத், வைபை மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கனக்டருடன் கூடிய யுஎஸ்பி 2.0 போர்ட் போன்றவற்றைக் கொண்டுள்ளன. இதன் இயக்கத்திற்காக இந்த டேப்லெட் டூவல் கோர் 8260 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இந்த ப்ராசஸரின் கடிகார வேகம் 1.2 ஜிஹெர்ட்ஸ் ஆகும்.

இந்த மெமோ 171 டேப்லெட்டின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக “உங்களுக்குத் தேவையான ஒரு பேட் உண்மையாகவே ஒரு போனாகக்கூடி இருக்கிறது” என்ற அடைமொழியோடு வருகிறது. பெரும்பாலோர் தமது டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் போனை ஒரே நேரத்தில எடுத்துச் செல்ல அதிகம் சிரமப்படுகின்றனர். ஆனால் இந்தப் பிரச்சினையை இந்த புதிய ஆசஸ் மெமோ டேப்லெட் முழுமையாகத் தீர்த்து வைக்கும். அதாவது இது ஒரு ஸ்மார்ட் போனாக மற்றும் ஒரு நவீன டேப்லெட்டாக மிகச் சிறப்பாக செயல்படும்.

இந்த ஆசஸ் இஇஇ பேட் மெமோ 171 டேப்லெட்டின் விலை ரூ.30000ற்குள் இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X