துல்லியமான திரையுடன் புதிய ஆசஸ் லேப்டாப்

Posted By: Karthikeyan
துல்லியமான திரையுடன் புதிய ஆசஸ் லேப்டாப்

ஆசஸ் ஒரு புதிய லேப்டாப்பைக் களமிறக்க இருக்கிறது. இந்த லேப்டாப்புக்கு யுஎக்ஸ்21எ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பின் முக்கிய சிறப்பு அம்சம் அதன் உயர்தர டெபினிசன் கொண்ட திரை ஆகும்.

குறிப்பாக 11.6 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும் இதன் திரை 1920 X 1080 பி்க்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. ஆனால் தொடுதிரை வசதி இல்லை. இந்த லேப்டாப் வெள்ளி நிறத்தில் அட்டகாசமாக இருக்கிறது.

இந்த லேப்டாப் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இயங்குகிறது. 1.4 ஜிஹெர்ட்ஸ் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர் மற்றும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 4000 மற்றும் இன்ட்ல் சிப்செட் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப்பின் வேகம் தாறுமாறாக இருக்கும். அதோடு இந்த லேப்டாப் மிக உறுதியாகவும் இருக்கும்.

பின்பக்க கேமரா இல்லை என்றாலும் இந்த லேப்டாப் முன்பக்க வெப்காமைக் கொண்டுள்ளது. இந்த வெப்காம் 720பி வீடியோவை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த லேப்டாப்பில் இமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதிகள் உண்டு. சேமிப்பைப் பொருத்தவரை இந்த லேப்டாப் 4ஜிபி ரேமையும் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டியையும் கொண்டுள்ளது.

இணைப்பு வசதிகளைப் பொறுத்தவரை இந்த லேப்டாப் ப்ளூடூத் மற்றும் எச்டிஎம்எல் ப்ரவுசர் போன்றவற்றைக் கொண்டுள்ளது. அதுபோல் இந்த லேப்டாப்பில் மல்டிமீடியா வசதிகள் சூப்பராக உள்ளன. குறிப்பாக ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், வீடியோ கேம்களை பதிவிறக்கம் செய்யும் வசதி, 2 சூப்பரான ஒலிப்பெருக்கிகள் மற்றும் ஆடியோ ஜாக் போன்ற வசதிகள் உள்ளதால் இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு லேப்டாப்பாகவும் இருக்கும்.

35 வாட்ஸ் கொண்ட பேட்டரியுடன் வரும் இந்த லேப்டாப் ரூ.50000க்கு விற்கப்படும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்