அதிக வசதிகளுடன் ஆசஸின் புதிய அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்!

Posted By: Karthikeyan
அதிக வசதிகளுடன் ஆசஸின் புதிய அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்!

அடக்கமான லேப்டாப்புகளுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு உள்ளது. குறிப்பாக லேப்டாப்புகளை விட 12 மற்றும் 13 இன்ச் அளவுள்ள டேப்லெட்டுகளை வாங்க மக்கள் தயாராகிவிட்டனர். ஏனெனில் இந்த டேப்லெட்டுகள் அடக்கமாகவும் அதே நேரத்தில் மிக குறைந்த எடையில் வருவதால் அவற்றை வெளியில் எடுத்துச் செல்வதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. அதே நேரத்தில் அதே இயக்குவதும் எளிதாக இருக்கிறது.

சமீபத்தில் ஆசஸ் நிறுவனம் தனது புதிய வர்த்தக ரீதியிலான ஆசஸ் பி23இ என்ற அல்ட்ரா போர்ட்டபுள் லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த லேப்டாப் ஆசஸ் ப்ரோ பி வரிசையில் வருகிறது.

இந்த லேப்டாப்பின் முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இது 12.5 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. அதோடு மெக்னீசியம் மற்றும் அலுமினியத் தகடுகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ப்ராசஸர்களை எடுத்துக் கொண்டால் இது 2ஜி இன்டல் ஐ வரிசையில் வரும் ஐ3, ஐ5 அல்லது ஐ7 ஆகிய ப்ராசஸர்களைக் கொண்டிருக்கும். இதன் ரேம் 8ஜிபி ஆகும். மேலும் இதன் 750ஜிபி ஹார்ட் டிஸ்க் நிமிடத்திற்கு 7200 முறை சுழல்கிறது.

மேலும் இந்த ஆசஸ் லேப்டாப்பில் 2எம்பி வெப்காம், எர்த் நெட் போர்ட், எச்டிஎம்ஐ இணைப்பு, ப்ளூடூத், யுஎஸ்பி மற்றும் மல்டி பார்மட் மெமரி கார்ட் ரீடர் போன்ற எல்லா வசதிகளும் உள்ளன.

இந்த ஆசஸ் லேப்டாப்பின் டிசைனைப் பார்க்கும் போது இது எளிமையாக இருந்தாலும் மிக அழகாக இருக்கிறது. இதன் கருப்பு நிறம் இந்த லேப்டாப்புக்கு கம்பீரத்தைக் கொடுக்கிறது. மேலும் இது ஒரு எடை குறைந்த மற்றும் உறுதியான லேப்டாப் ஆகும்.

இதன் கீபோர் ஸ்பில் ப்ரூப் வசதி கொண்டிருப்பதால் இந்த லேப்டாப்புகளை வெளியிடங்களில் பயன்படுத்தினாலும் இது பாதிப்பு அடைவதில்லை. மேலும் இதன் ஹார்ட் டிஸ்க் ஆன்டி ஷாக் வசதி கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் மிக உறுதியாக இருக்கும். மேலும் இந்த லேப்டாப் அழுத்த சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் வர்த்தகத்தில் ஈடுபடும் நண்பர்களுக்கு இந்த லேப்டாப் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

இந்த லேப்டாப்பில் இன்டல் 2ஜி ப்ராசஸர்களான ஐ3, ஐ5 அல்லது ஐ7 ஆகியவற்றில் ஒன்றை பொருத்திக் கொள்ளலாம். இது ஒரு யுஎஸ்பி 2.0 மற்றும் ஒரு 3.0 போர்ட்டைக் கொண்டுள்ளது. இதன் 12.5 இனச் டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1366 x 768 ஆகும். மேலும் இதன் டிஸ்ப்ளே ஆன்டி க்ளேர் வசதி கொண்டது.

இந்த ஆசஸ் லேப்டாப் 3 செல் பேட்டரியுடன் வருகிறது. இது ஒரு சிறிய குறைபாடுதான ஏனெனில் அடிக்கடி இந்த லேப்டாப்பை மின் இணைப்பில் இணைக்க வேண்டியது இருக்கும். ஆனால் இந்த 3 லித்தியம் ஐயன் பேட்டரி மிக வேகமாக சார்ஜ் ஆகிவிடும். இந்த ஆசஸ் பி23இ லேப்டாப்பின் விலை ரூ.50,000மாக இருக்கும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot