Home
Computer

மல்டிமீடியா நோட்புக்குகளை களமிறக்கும் ஆசஸ்!

By Karthikeyan
மல்டிமீடியா நோட்புக்குகளை களமிறக்கும் ஆசஸ்!

ஆசஸ் இரண்டு புதிய நோட்புக்குகளை விரைவில் களமிறக்குகிறது. இந்த நோட்புக்குகளுக்கு மல்டிமீடியா என்56விஎம் மற்றும் வீடியோ கேம் வசதியுடன் கூடிய நோட்புக் ஜி75விஎம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.

மல்டிமீடியா என்56விஎம் நோட்புக் ஆசஸின் பிரபலமான என்வரிசை நோட்புக்கில் வரும் புதிய நோட்புக்காகும். இந்த நோட்புக் 3ஜி கோர் ப்ராசஸர் கொண்டு வருகிறது. மேலும் இந்த நோட்புக்கில் ஆசஸ் சூப்பர் உயர்ரக என்ஜின் II டெக்னாலஜியும் உள்ளதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும்.

அடுத்ததாக இந்த நோட்புக் 15.6 இன்ச் முழு எச்டி எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.89,999 ஆகும்.

ஆசஸ் ஜி75விஎம் நோட்புக் 17.3 இன்ச் அளவில் முழு எச்டி நான்-க்ளேர் 3டி பேனல் கொண்ட டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் இந்த நோட்புக்கில் 3ஜி இன்டல் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர் மற்றும் என்விடியாவின் புதிய ஜிஇபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 670எம் (3ஜிபி டிடிஆர்5) க்ராபிக்ஸ் கொண்டு வருகிறது. அதனால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக அற்புதமாக செய்ய முடியும்.

மேலும் இந்த நோட்புக் 16ஜிபி ரேம், 1.3டிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் ப்ளூ ரே கோம்ப் மற்றும் ஜெனியூன் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் இயங்கு தளம் ஆகியவற்றோடு வருகிறது. இந்த கேமிங் நோட்புக்கின் விலை ரூ.1,39,999 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X