ஆசஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்களின் சிறப்பு அம்சங்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன், லேப்டாப் ஆகியவற்றின் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆசஸ் நிறுவனம் தற்போது இரண்டு புதிய வகை லேப்டாப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.

ஆசஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்களின் சிறப்பு அம்சங்கள்

விவோபுக் புரோ 15 (N580) விவோபுக் S15 (S510) ஆகிய இந்த இரண்டு மாடல்களும் வாடிக்கையாளர்களால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், அதிநவீன தொழில்நுட்பமும், குறைந்த விலையும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோபுக் புரோ 15 (N580) லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.51,575 - ல் இருந்து ஆரம்பமாகிறது. அதேபோல் விவோபுக் S15 (S510) மாடல் லேப்டாப் இந்திய மதிப்பில் 32,210 - ல் இருந்து ஆரம்பமாகிறது.

இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையிலான விலை வித்தியாசத்திற்கு காரணம் முன்னதில் NVIDIA GeForce GTX 1050 என்ற கிராபிக்ஸ் வசதி இருப்பது ஆகும். இரண்டு மாடல்களும் அடுத்த மாதம் முதல் சந்தையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மாடல் லேப்டாப்புகளின் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்

விவோபுக் புரோ 15 லேப்டாப்பின் சைஸ் மற்றும் டிஸ்ப்ளே:

விவோபுக் புரோ 15 லேப்டாப்பின் சைஸ் மற்றும் டிஸ்ப்ளே:

விவோபுக் புரோ 15 மாடல் லேப்டாப்பின் 19.2mm மட்டுமே அகலம் உள்ளது. மேலும் இதன் எடை 2.2 கிலோகிராம் மட்டும். இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே குறித்து சொல்ல வேண்டுமென்றால் இதுவொரு UHD 4K டிஸ்ப்ளே வகையை சேர்ந்த 3840x2160 பிக்சல் ரெசலூசனை கொண்டது.

மேலும் இந்த மாடலின் டிஸ்ப்ளேவில் வைட்-வியூ டெக்னாலஜி உள்ளது. அதுமட்டுமின்றி கண்களை பாதுகாக்கும் வகையில் இதில் RBG கலர் டெக்னாலஜியும் உண்டு

ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் எப்படி இருக்கும்?

ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் எப்படி இருக்கும்?

விவோபுக் புரோ 15 மாடல் லேப்டாப் 7வது தலைமுறை இண்டல்கோர் ஐ5/ஐ7 H சீரிஸ் புராஸசரை கொண்டது. மேலும் இந்த லேப்டாப்பில் 16GB DDR4 ரேம், GeForce GTX 1050 கிராபிக்ஸ் மற்றும் அதிக ஸ்டோரேஜ் ஆன 2TB HDD மற்றும் 512GB SSD ஆகிய அம்சங்கள் உள்ளது. சாப்ட்வேர் பக்கம் சென்று பார்த்தால் இந்தா லேப்டாப் விண்டோஸ் 10-ல் இயங்குவது ஆகும்.

ஜூன் மாதம் முதலே ஜியோ பிராட்பேண்ட் சேவை - சாத்தியமான திட்டங்கள் என்னென்ன.?ஜூன் மாதம் முதலே ஜியோ பிராட்பேண்ட் சேவை - சாத்தியமான திட்டங்கள் என்னென்ன.?

விவோபுக் புரோ 15 லேப்டாப்பின் மற்றா சிறப்புகள் என்னென்ன?

விவோபுக் புரோ 15 லேப்டாப்பின் மற்றா சிறப்புகள் என்னென்ன?

மேலும் இந்த் லேப்டாப்பின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவெனில் ஹார்மன் கார்டோன் சர்டிபிகேட் பெற்ற ஆடியோ டெக்னாலஜி இதில் உள்ளது. இதில் இரண்டு ஸ்பிக்கர்கள் மற்றும் 8CC ஆடியோ சேம்பர் மற்றும் ஸ்மார்ட் ஆப்ளிஃபையர் ஆகியவை உள்ளது.

இதனால் இதன் வால்யூம் திருப்தி தரும் வகையில் இருக்கும். மேலும் இந்த விவோபுக் புரோ 15 லேப்டாப்பில் பிங்கர் பிரிண்ட் சென்சார், பேக்லிட் கீபோர்ட், வைபை வசதி ஆகியவையும் உண்டு

விவோபுக் S15 மாடலின் சைஸ், டிஸ்ப்ளே குறித்து பார்ப்போமா!

விவோபுக் S15 மாடலின் சைஸ், டிஸ்ப்ளே குறித்து பார்ப்போமா!

இந்த மாடல் 15.6 இன்ச் FHD நானோ எட்ஜ் டிஸ்ப்ளே வகையை கொண்டது. 7.8mm பெஸல் லெவல் டிஸ்ப்ளேவை கொண்ட இந்த லேப்டாப்பின் ஸ்க்ரீன் 80% பயன்படுத்தும் வகையில் இருக்கும்

17.9mm அகலம், 1.5 கிலோகிராம் எடையில் அமைந்துள்ள இந்த விவோபுக் S15 மாடல் லேப்டாப் எளிதில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தூக்கி செல்லும் வகையில் அமைந்துள்ளது.

விவோபுக் S15 மற்ற சிறப்பு அம்சங்கள்

விவோபுக் S15 மற்ற சிறப்பு அம்சங்கள்

இந்த விவோபுக் S15 மாடல் லேப்டாப் இண்டல்கோர் ஐ3/ஐ5 பிராஸசர்கலை கொண்டதோடு, 16GB DDR4 ஸ்டோரேஜ் இடம் கொண்டது. மேலும் இந்த லேப்டாப் NVIDIA GeForce 940MX கிராபிக்ஸ் தன்மையுடன் அமைந்துள்ளது. மேலும் முந்தைய மாடலை போலவே இந்த மாடலிலும் விண்டோஸ் 10, பிங்கர் பிரிண்ட், வைபை வசதி ஆகியவை உண்டு.

Best Mobiles in India

Read more about:
English summary
Asus has just unveiled two new laptops called the VivoBook Pro 15 (N580) and the VivoBook S15 (S510) at the Computex 2017.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X