வியக்கவைக்கும் விலையில் அசுஸ் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்.!

|

அசுஸ் நிறுவனத்தின் லேப்டாப் மாடல் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது அசுஸ் நிறுவனம்.

15.6-இன்ச் டிஸ்பிளே

15.6-இன்ச் டிஸ்பிளே

அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளTUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடல் 15.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.மேலும்240Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

76Wh பேட்டரி

76Wh பேட்டரி

அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலில் 76Wh பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே 16 மணி நேரத்திற்கும் மேலான பேட்டரி ஆயுளை வழங்குகிறது. பின்பு இந்த லேப்டாப் 100W வரை டைப்-சி அடாப்டர்கள்வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மோட்டோ ஜி10 பவர், மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! நம்பி வாங்கலாம்.!இந்தியாவில் மோட்டோ ஜி10 பவர், மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! நம்பி வாங்கலாம்.!

மெல்லிய வடிவில்

முன்பு வந்த அசுஸ் லேப்டாப் மாடல்களை விட இந்த TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடல் 10 சதவீதம் சிறியது. பின்புமெல்லிய வடிவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய கேமிங் லேப்டாப் மாடல்.

பல்வேறு இணைப்புஆதரவுகளை

தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி 3.2 ஜென் 1, எச்டிஎம்ஐ 2.0 போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் 5.2, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

இன்டெல் கோர் i7-1

அசுஸ் நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப் மாடலில் 11 வது ஜெனரல் இன்டெல் கோர் i7-11370H CPU மற்றும் NVIDIA GeForce RTX 3070 அல்லது NVIDIA GeForce RTX 3060 இரண்டு கிராஃபிக் கார்டு விருப்பங்களை பெறமுடியும்.

 32GB of DDR4 ரேம் வசதி

மேலும் இந்த சாதனத்தில் 32GB of DDR4 ரேம் வசதி மற்றும் 1 டிபி வரை சேமிப்பு வசதி இடம்பெற்றுள்ளது. இந்த TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த சாதனத்தின் ஆடியோ பற்றி பேசுகையில், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா தொழில்நுட்பத்துடன் இரட்டை ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல். பின்பு ஸ்டீரியோ ஹெட்செட் அல்லது ஸ்பீக்கர்களுக்கு 7.1-சேனல் மெய்நிகர் சரவுண்ட் ஒலியைக் கொண்டுவருகிறது.

ரூ.1,39,990-ஆக உள்ளது. பின்பு Moonlight White கொண்ட அசுஸ்

Eclipse Grey நிறம் கொண்ட அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலின் விலை ரூ.1,39,990-ஆக உள்ளது. பின்புMoonlight Whiteநிறம் கொண்ட அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலின் விலை ரூ.1,40,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Asus launches TUF Dash F15 gaming Laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X