டேப்லட் சந்தையை அமர்க்களப்படுத்தும் ஆசஸ்!

இன்னும் தீபாவளி கொண்டாட்டமே முடியவில்லை. ஆனால் அடுத்து எலக்ட்ரானிக் சாதன உலகம் பொங்கல் பண்டிகையை குறி வைப்பது போல் ஏராளமான புதிய மின்னணு சாதனங்கள் ஜனவரி மாதத்தில், மார்கெட்டை முற்றுகையிட தயாராகிறது.
அந்த வகையில் ஆசஸ் நிறுவனம் விவோ டேப் ஆர்டி மற்றும் நோட்பேட் டேப்லட் ஹபிரிட் டெய்க்கி என்ற எலக்ட்ரானிக் சாதனங்களை அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது. இந்த டேப்லட் மற்றும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட நோட்புக்குகள் விண்டோஸ் ஆர்டி ஆப்பரேட்டிஹ் சிஸ்டத்தில் இயங்கும். இந்த டேப்லட்கள் இன்னும் 2
மாதத்தில் மார்கெட்டை நெருங்கும் என்று கூறலாம்.
இதோடு ஆசஸ் நிறுவனம் 7 இஞ்ச் திரை மற்றும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் டேப்லட்டினை ரூ. 15,000 விலையில் அறிமுகம் செய்யும் என்றும் தி மொபைல் இன்டியன் வலைத்தளம் தகவலை வெளியிட்டிருக்கிறது.
விவோ டேப் ஆர்டி டேப்லட் ரூ. 61,999 விலை கொண்டதாகவும் மற்றும் டெய்க்கி ஹைபிரிட் நோட்புக் டேப்லட் ரூ. 1,39,999 விலை கொண்டதாகவும் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆசஸ் விவோ ஆர்டி டேப்லட் 10.1 இஞ்ச் சூப்பர் ஐபிஎஸ்+ திரை தொழில் நுட்பத்தினையும், என்வீடியா டெக்ரா-3 பிராசரினையும் கொண்டதாக இருக்கும். அதே சமயம் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 8 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃபிளாஷ், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா, வைபை ஆகிய தொழில் நுட்ப வசதிகளையும் இந்த டேப்லட் வழங்கும் என்று கருதப்படுகிறது.
டெய்க்கி டேப்லட் விண்டோஸ்-8 இயங்குதளத்தினையும், இன்டெல் ஐ-7 பிராசஸரினை அளிக்கும். மற்றுபடி இந்த டேப்லட்டில் வைபை, ப்ளூடூத், 11.6 இஞ்ச் திரை, யூஎஸ்பி போர்ட், 5 மெகா பிக்ஸல் கேமரா ஆகிய வசதியினை கொடுக்கும். கூகுள் நிறுவனத்துடன் இணைந்து நெக்சஸ்-7 டேப்லட்டினை உருவாக்கிய ஆசஸ், அடுத்த போட்டிக்கும் தயாராகிவிட்டது போலும்.


Click it and Unblock the Notifications