ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்விஜ் இயங்குதளத்தில் இயங்கும் முதல் டேப்லட்

ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லட்டின் சிறப்புகளைப் பார்த்தால் அது என்விடியா க்வாட் கோர் டேக்ரா 3 மற்றும் கால்-எல் ப்ராசஸரைக் கொண்டுள்ளதால் இதற்கு குறைவான மின்சாரமே தேவைப்படும். இதன் 10.1 இன்ச் டிஸ்ப்ளே 1280*800 பிக்சல் ரிசலூசனைக் கொண்டுள்ளது.
இதன் ரேம் 1ஜிபி ஆகும். இதன் இன்டர்னல் சேமிப்பு வசதி 16ஜிபி அல்லது 32ஜிபி ஆகும். வாடிக்கையாளர்கள் இதில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளலாம். இதன் தடிமனைப் பார்த்தால் அது 8.3 மிமீ ஆகும். அதனால் இது மெல்லியாதாக அதே நேரத்தில் போர்ட்டபுல்லாக இருக்கிறது. மேலும் பழைய டேப்லட்டின் 12.9மிமீ அளவைவிட குறைவானது.
ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லட்டில் யுஎஸ்பி போர்ட் இணைப்பும் உள்ளது. அதுபோல் ஒரு சிறிய எச்டிஎம்ஐ போர்ட்டும் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய கீபோர்டு டோக்கிங்கும் மிக நவீனமாக இருக்கும். இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்விஜ் இயங்குதளம் அல்லது ஹனிகோம்ப் இயங்குதளம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் இதில் கட்டிங் எட்ஜூம் இருக்கலாம்.
ஆசஸ் ட்ரான்ஸ்பார்மர் ப்ரைம் டேப்லட்டுதான் வரலாற்றில் முதல் முறையாக ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தில் இயங்கும் டேப்லட் ஆகும். அதனால் உலக அளவில் இதன் விற்பனையும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது கருப்பு நிறத்தில் அலுமினியம் கோட்டிங் கொண்டு பளபளப்பாக இருக்கிறது. மேலும் இதன் நடுவில் ஆசஸின் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் பேட்டரி 14.5 மணி நேர டாக்டைமைக் கொண்டுள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications