புதிதாக இரண்டு உயர்ரக லேப்டாப்புகள்: ஆசஸ் களமிறக்குகிறது

என்55எஸ்எப் இரண்டு வேர்சன்களில் வருகிறது. அதாவது அதனுடைய ஒரு வெர்சன் என்னவென்றால் அது இண்டல் கோர் ஐ5-2410எம் ப்ராசஸர் கொண்டு கடிகார வேகம் 2.3ஜிஹர்ட்ஸ் கொண்டுள்ளது. இது 4ஜிபி ராம் கொண்டுள்ளதால் இதன் வேகம் தாறுமாறாக இருக்கும்.
ஆனால் இதன் ஹார்ட் டிஸ்க்கின் சேமிப்பு வசதி 500 ஆகும். என்55எஸ்எப்ன் இரண்டாவது வெர்சன் என்னவென்றால் இது இண்டல் கோர் ஐ7-2630க்யுஎம் பார்சஸர் கொண்டு 2ஜிஹர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த அதி வேக லேப்டாப் 8ஜிபி ராமுடன் 750ஜிபி இடவசதியை ஹார்ட் டிஸ்க்கில் கொண்டுள்ளது. இதன் திரை 15.6 இன்ச் ஆகும்.
இந்த இரண்டு லாப்டாப்புகளிலும் நிறைந்த வீடியோ கேம்களும் மற்றும் க்ராபிக்ஸ் வசதிகளும் ஏராளமாக உள்ளன. அதாவது இரண்டு லாப்டாப்புகளும் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 555எம் க்ராபிக்ஸ் அக்ஸிலரேட்டருடன் 2ஜிபி மெமரியும் கொண்டுள்ளன.
ஆசஸ் என்75எப் ஒரு வெர்சனை மட்டுமே கொண்டுள்ளது. அதாவது என்55எஸ்எப்ன் இரண்டாவது வெர்சனை கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே திரை என்55எஸ்எப்ஐ விட பெரிதாகும் அதாவது 17.3 இன்ச் அளவைக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் 1920 x 1080 பிக்ஸலைத் தருகிறது.
இதன் ஹார்ட் ட்ரைவ் சேமிப்பைப் பார்த்தால் பிரமிக்க வைக்கும். அதாவது இது ஹோமாஜீனஸ் ஹச்டிடி 1.5டிபியைக் கொண்டுள்ளது. மேலும் இன்ஸ்டன்ட் ஆன் உள்ளதால் இதில் வேலையை நிறுத்தி இருந்தால் மீண்டும் தொடங்கும் போது விரைவாக இதை தொடங்கலாம். அதாவது 2 வினாடிகளில் நாம் விட்டு வந்த இடத்தை அடையலாம்.
இந்த இரண்டு லேபாடாப்புகளும் கூல் தொழில் நுட்பமான யுஎஸ்பி ஜார்ஜர்+ கொண்டிருப்பதால் இதை நேரடியாக ஜார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் ஆடியோ தரம் நம்மை மெய் மறக்க வைக்கும். ஏனெனில் இந்த லேப்டாப்புகள் பேங் & ஒலுப்சென் ஐஸ்பவர் தொழில் நுட்பமும் மற்றும் சோனிக் மாஸ்டர் சப்வூபர் சிஸ்டமும் கொண்டிருக்கின்றன.
இதன் விலைகளைப் பார்த்தால் ஆசஸ் என்55எஸ்எப் ரூ. 70500 முதல் 80000 வரை கிடைக்கும். அதே நேரத்தில் ஆசஸ் என்75எப் ரூ.91000க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications