அசுஸ் நிறுனத்தின் இரண்டு அட்டகாசமான லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!
இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் சிறந்த பிராசஸர் மற்றும் அருமையான டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அசுஸ் நிறுவனம் இன்று டியுஎப் கேமிங் FX505DY, FX705DY லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் சிறந்த பிராசஸர் மற்றும் அருமையான டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அசுஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்த இரண்டு லேப்டாப் மாடல்களும் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த இரண்டு சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
அசுஸ் நிறுவனத்தின் FX505DY கேமிங் லேப்டாப் மாடல் 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் FX705DY லேப்டாப் மாடல் பொதுவாக 17.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

இரண்டு கேமிங் லேப்டாப் மாடல்களும் ஏஎம்டி Ryzen 5 3550H பிராசஸர் வசதியை கொண்டுள்ளது, பின்பு 32GB of DDR4 2400 MHz ரேம் வசதி மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு லேப்டாப் மாடல்களும் Radeon-RX560X கிராபிக்ஸ் கார்டு ஆதரவு மற்றும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
மேலும் இரண்டு யுஎஸ்பி 3.1, யுஎஸ்பி 2.0, எச்டிஎம்ஐ போர்ட், ஆடியோ ஜாக் 3.5எம்எம், மைக்ரோபோன் ஜாக், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இரண்டு லேப்டாப் மாடல்கள்.

FX505DY, லேப்டாப் மாடலில் 48வாட் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு இந்த லேப்டாப் சாதனத்தின் விலை ரூ.59,990-ஆக உள்ளது.
TUF705DY லேப்டாப் மாடலில் 64வாட் பேட்டரி பொறுத்தப்பட்டுளளது,மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.69,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications