அசுஸ் அறிமுகம் செய்யும் முதல் 15-இன்ச் குரோம்புக்.!

அசுஸ் நிறுவனம் தனது முதல் 15 இன்ச் C523 என்ற குரோம் புக்கை அறிமுகம் செய்யவுள்ளது

|

குரோம்புக்ஸ் என்றாலே அது 13 இன்ச் அளவிற்கு மேல் இருக்காது என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தற்போது ஏசர்புக் 15 என புதிய வரவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆம், அசுஸ் நிறுவனம் தனது முதல் 15 இன்ச் C523 என்ற குரோம் புக்கை அறிமுகம் செய்யவுள்ளது.

அசுஸ் அறிமுகம் செய்யும் முதல் 15-இன்ச் குரோம்புக்.!

சமீபத்தில் வெளிவந்து அனைவர் மனதையும் கவர்ந்த 12 இன்ச் C223 மற்றும் 14 இன்ச் C423 மாடல்களை போன்றே இந்த ஏசஸ் 15 இன்ச் புதிய குரோம்புக் வடிவத்தில் உள்ளது. இந்த புதிய சாதனம் 15.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் ஃபுல் ஹெச்டி ரெசலுசனும் உள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன், 10 மணி நேர பேட்டரி திறன் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அளவு வெறும் 15.6 மிமி என்பதும் இதன் எடை 3.2 எல்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சாதனத்தின் பிராஸசர் குறித்த தகவல் விண்டோஸ் 10 பிரிமியத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. விண்டோஸ் 10 பிரிமியம் இன்னும் வெளிவரவில்லை என்பது தெரிந்ததே

குறைந்தபட்சம் பிரிட்டன் மார்க்கெட்டில் அடுத்த வருடம் இந்த புதிய குரோம்புக் C523 அறிமுகமாகும் என்றும் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் வெளியாகும் என்றும் தெரிகிறது.

மேலும் சாம்சங் நிறுவனமும் விண்டோஸ் லேப்டாப் அறிமுகம் குறித்த செய்தியை வெளியிட்டு கொண்டிருக்கின்றது என்பதும் 'நோட்புக் பிளாஷ் என்ற இந்த சாதனம் எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் இருப்பினும் 2019ஆம் ஆண்டு வெளிவரும் இந்த அதிநவீன சாதனம் மக்கள் எளிதில் வாங்கும் விலையில் தான் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் ஐரோப்பாவில் இந்த புதிய சாதனம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து பகுதிகளிலும் எளிதில் கிடைக்கும் வகையில் மார்க்கெட்டிங் செய்யப்படவுள்ளதால் இந்த சாதனத்தை வாங்க அதிக தேட தேவையில்லை. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நோட்புக் 3 மற்றும் நோட்புக் 5 மாடல்களின் அடுத்த வடிவமே இந்த புதிய சாம்சங் நோட்புக் பிளாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லேப்டாப்புகள் ஏழாவது மற்றும் எட்டாவது ஜெனரேஷன் இண்டெல் சிப்ஸ் கொண்டது என்பதும், இந்த சாதனத்தில் டிடிஆர்4 ரேம், ஹெச்டிடி-எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் கோம்போ மற்றும் 1920 வரை ரெசலுசன் மற்றும் 1080 பிக்சல் தன்மை உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தயாரிப்புகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் வகையில் குறைந்த லாபத்துடன் கூடிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் இந்த புதிய சாதனத்திற்கு டிரேட்மார்க் முத்திரை கிடைக்கும் என்பதால் இந்த புதிய சாதனம் இந்த ஆண்டு வெளியாக சாத்தியமில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டு கூடிய விரைவில் இந்த சாதனம் உங்கள் கையில் இருக்கும்

Best Mobiles in India

English summary
ASUS introduces the C523 - its first 15-inch Chromebook: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X