பட்ஜெட் விலையில் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்தது அசுஸ்.!
அசுஸ் விவோபுக் 15 சாதனம் பொறுத்தவரை 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அசுஸ் நிறுவனம் தற்சமயம் அசுஸ் விவோபுக் 15 மற்றும் அசுஸ் எப்570 நோட்புக் என்ற இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த லேப்டாப் மாடல்கள் பேடிஎம் மால் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இசந்த இரண்டு லேப்டாப் மாடல்களும் நவீன மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசுஸ் எப்570 நோட்புக்:
அசுஸ் எப்570 நோட்புக் சாதனம் பொறுத்தவரை 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப் மாடல்.
மேலும் இந்த லேப்டாப் சிறந்த கேமிங் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

அசுஸ் எப்570 நோட்புக் மென்பொருள்:
MD Ryzen 5 செயலி மற்றும் AMD ரேடியான் வேகா 8 கிராபிக்ஸ், உடன் டூயல் பேண்ட் 802.11ஏசி மென்பொருள் தொழில்நுட்ப உதவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 1TB 5400RPM ஹார்டு டிஸ்க் அம்சம், பின்பு 48 மணி நேரம் இயங்கக்கூடிய பேட்டரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக விண்ட்டோஸ் 10(64 பிட்)
இயங்குதளத்தில் இந்த லேப்டாப் மாடல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் விவோபுக் 15:
அசுஸ் விவோபுக் 15 சாதனம் பொறுத்தவரை 15.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்ள்ளது, இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அசுஸ் விவோபுக் 15 மென்பொருள்:
அசுஸ் விவோபுக் 15 பொதுவாக யுAMD Ryzen 3 - 2200U செயலி மற்றும் ரேடியான் வேகா 8 கிராபிக்ஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு
42 மணி நேரம் இயங்கக்கூடிய பேட்டரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக விண்ட்டோஸ் 10(64 பிட்) இயங்குதளத்தில் இந்த லேப்டாப் மாடல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:
அசுஸ் விவோபுக் 15 சாதனத்தின் ஆரம்ப விலைப் பொறுத்தவரை ரூ.30,990-ஆக உள்ளது.
அசுஸ் விவோபுக் எப்570 சாதனத்தின் ஆரம்ப விலைப் பொறுத்தவரை ரூ.52,990-ஆக உள்ளது


Click it and Unblock the Notifications