Home
Computer

இந்தியாவில் அசுஸ் நிறுவனம்அறிமுகம் செய்த தரமான லேப்டாப்.! விலை மற்றும் விபரங்கள்.!

அசுஸ் நிறுவனம் புதிய அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடல் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

து தலைமுறை இன்டெல் கோர்-ஐ7 பிராசஸ

11வது தலைமுறை இன்டெல் கோர்-ஐ7 பிராசஸர் வசதி மற்றும் 16ஜபி ரேம் கொண்ட அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி(B5302) லேப்டாப் மாடலின்விலை ரூ.1,39,000-ஆக உள்ளது. குறிப்பாக ஆன்லைன் தளங்களில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப்

அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் ஆனது 13.3-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,920x1,080 பிக்சல் தீர்மானம், 16:9 என்ற திரைவிகிதம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் வெளிவந்துள்ளது.

திய அசுஸ் லேப்டாப் ஆனது இன்டெல்

இந்த புதிய அசுஸ் லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ5 1135ஜி7 மற்றும் இன்டெல்கோர் ஐ7-1165ஜி7 பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 16GB of DDR4 ரேம் மற்றும் 2TB வரையிலான சேமிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். அதேபோல் Intel Xe கிராபிக்ஸ் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 மிலிட்டரி-கிரேடு கட்டமைப்பில்

MIL-STD 810H US மிலிட்டரி-கிரேடு கட்டமைப்பில் வருகிறது இந்த அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடல். அதாவது இந்த லேப்டாப் சூடாவதை தவிர்க்க சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அனைத்து இடங்களிலும் மிக பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

 ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப்

அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதி உள்ளது. இதுதவிர 3DNR கேமரா ஆதரவும் கொண்டுள்ளது இந்த லேப்டாப். இது குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் கூட
தெளிவான வீடியோ தரத்தை வழங்கும்.

சுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302)

புதிய அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடல் நான்கு செல் 66W பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஒரே சார்ஜில் 12 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 39 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 60 சதவீத பேட்டரி ஆயுளை வழங்கும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப்.

வைஃபை 6, புளூடூத் 5.0 உள்ளி

இரண்டு தண்டர்போல்ட், யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப்-ஏ,எச்டிஎம்ஐ 2.0பி, ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ எச்டிஎம்ஐ, வைஃபை 6, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப்.

Best Mobiles in India

English summary
Asus ExpertBook B5 Flip OLED (B5302) Laptop Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X