Home
Computer

கூகுள் மற்றும் ஆசஸ் கூட்டணியில் புதிய நெக்சஸ் டேப்லெட்!

By Karthikeyan
கூகுள் மற்றும் ஆசஸ் கூட்டணியில் புதிய நெக்சஸ் டேப்லெட்!

கூகுளின் நெக்சஸ் வரிசையி்ல் வரும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானவே. மேலும் இவை விற்பனையிலும் சாதனைகளைப் படைத்திருக்கின்றன. இந்த போன்களை கூகுள் மற்றும் ஒரு சில ஹார்ட்வேர் நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கின்றன. அதைத் தொடர்ந்து சமீபத்தில் வந்திருக்கும் செய்தி, கூகுள் ஒரு புதிய நெக்சஸ் வரிசை டேப்லட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதாகும்.

இந்த தகவல் நெடுங்காலமாக வந்து கொண்டே இருந்தாலும் அது விரைவில் உறுதியாகிவிடும் என்று தெரிகிறது. கூகுளின் இந்த புதிய டேப்லெட் 9 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். இதன் இயங்குதளம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்விஜ் ஆகும். இந்த டேப்லெட்டைப் பற்றிய மற்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இந்து கூகுள் டேப்லெட்டை ஆசஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் டேக்ரா 3 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்ற தகவலும் வருகிறது.

ஆசஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கிடைய உள்ள வர்த்தக உறவு ஆரோக்கியமான ஒன்றாகும். இதை இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த காலங்களிலேயே நிரூபித்திருக்கின்றன. குறிப்பாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வந்து ஆசஸின் ஸ்மார்ட் போன்கள் மிகவும் பிரபலமானவை. மேலும் ஆன்ட்ராய்டு சான்விஜ் இயங்கு தளத்தை பயன்படுத்தியதில் முன்னனியில் இருப்பது ஆசஸ் ஆகும்.

குறிப்பாக ஆசஸின் கின்டில் பயர் ஆன்ட்ராய்டு டேப்லெட் மிகவும் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இதன் குறைவான விலை ஆகும். தற்போது வரவிருக்கும் புதிய நெக்சஸ் டேப்லெட்டின் விலையும் ரூ.10,000க்குள் இருக்கும் என்று தெரிகிறது. இந்த புதிய டேப்லெட் சிறந்த வசதிகளுடன் வந்தால் அது கண்டிப்பாக கிண்டில் பயருக்கு போட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

குறிப்பாக உயர்தர டேப்லெட்டுகள் குறைந்த விலையில் வருவதில்லை. ஆனால் கூகுளின் இந்து புதிய நெக்சஸ் டேப்லெட் குறைந்த விலையில் வரும் என்று தெரிகிறது. ஆனால் இந்த புதிய டேப்லெட்டின் விலை மற்றும் அது வெளிவரும் தேதி இன்னும் தெரியவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X