ஆசஸ் வழங்கும் புதிய ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்!

Posted By: Staff
 ஆசஸ் வழங்கும் புதிய ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்!
ஆல் இன் ஆல் அழகு ராஜா கணினிகளுக்கு இப்போது மிகப் பெரிய வரவேற்பு நிலவுகிறது. அதாவது இந்த கணினிகளில் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவிக்கலாம். அதனால் தான் மக்கள் இப்படிப்பட்ட கணினிகளை விரும்பி வாங்குகின்றனர்.

அப்படிப்பட்ட எல்லா வசதிகளையும் கொண்ட புதிய கணினியைக் களமிறக்குகிறது ஆசஸ் நிறுவனம். இந்த புதிய கணினியின் பெயர் ஆசஸ் இடி2700 ஆகும். இதன் விசேஷம் என்னவென்றால் இது தொடுதிரை இன்புட் மெத்தேட் வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் இது 10 விரல் மல்டி டச் இன்புட்டையும் கொண்டிருக்கிறது.

இந்த இடி2700 மேசைக் கணினியின் சிறப்புகளைப் பார்த்தால் உண்மையாகவே கிறங்கடித்துவிடும். அதாவது இந்த கணினியில் விருப்பத்திற்கு ஏற்ப இன்ட்ல ஐ3 அல்லது ஐ5 அல்லது ஐ7 போன்ற ப்ராசஸர்களைப் பயன்படுத்தலாம். இது க்ளோசி கருப்பு ப்ரேம் மற்றும் தொடு உணர்வு பட்டன்களைக் கொண்டுள்ளது.

இந்த கணினியின் திரை 27 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதில் 2 டிபி ஹார்டு டிஸ்க் உள்ளது. இது  டிடிஆர்3 வகையைச் சேர்ந்த 4 முதல் 8 ஜிபி கொண்ட ரேமைக் கொண்டுள்ளது.

அடுத்ததாக இந்த ஆசஸ் மேசைக் கணினியின் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் அது வயர்லஸ் லேன், யுஎஸ்பி 3.0 போர்ட்டுகள் மற்றும் எச்டிஎம்ஐ கனெக்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஆசஸ் சோனிக் மாஸ்டர் தொழில் நுட்பமும் உண்டு. மேலும் இந்த கணினியில் ஸ்டீரியோ ஒலி அமைப்பை அனுபவிக்கலாம்.

இந்த மேசைக் கணினியின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இதன் டிஸ்ப்ளே ஆகும். இந்த டிஸ்ப்ளே பார்ப்பதற்கு பக்காவாக இருக்கிறது. மேலும் இந்த திரை தொடு வசதி கொண்டுள்ளதால் அதற்கேற்ப இது டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த டிஸ்ப்ளேயில் 10 விரல்களையும் பயன்படுத்தக்கூடிய மல்டி டச் வசதியை இந்தக் கணினி வழங்குகிறது.

மேலும் இந்த மேசைக் கணினியில் வீடியோ கேம் விளையாடுவதற்கும் அருமையாக இருக்கும். இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்