Home
Computer

40% மின் சேமிப்பை வழங்கும் புதிய ஆசஸ் கம்ப்யூட்டர்!

By Super

40% மின் சேமிப்பை வழங்கும் புதிய ஆசஸ் கம்ப்யூட்டர்!
மார்க்கெட்டில் லேப்டாப்புகளுக்கு அதிக மவுசு இருந்தாலும், மேசை கணினிகளுக்கு மவுசு குறையவில்லை. எனவே, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை புரிந்துகொண்டு ஆசஸ் எஸ்ஸன்சியோ சிஎம் 1740-40 என்ற புதிய கம்ப்யூட்டரை ஆசஸ் வடிவமைத்துள்ளது. இந்த புதிய கம்ப்யூட்டர் 40 சதவீதம் அளவுக்கு மின் சேமிப்பை வழங்கும் என்று ஆசஸ் தெரிவித்துள்ளது.

இதன் முன்பகுதியின் மேல் பகுதியில் 2 போர்ட்டுகள், 1 மெமரி கார்டு ரீடர் ஆகியவை உள்ளன. அதுபோல் 2 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளும் மற்றும் ஹெட்போன் மற்றும் மைக் இன்புட்டும் உள்ளன. இந்த போர்ட்டுகள் மேல் பகுதியில் உள்ளதால் ஆன்லைன் கான்பரன்சிங் செய்வதற்கு மிக ஏதுவாக இருக்கிறது. இந்த போர்ட்டுகளுக்குக் கீழே டிவிடி ரீட் பர்ன் ட்ரைவ் உள்ளது.

இந்த மேசைக் கணினியின் பின்பகுதியில் 2 யுஎஸ்பி 3.0 போர்ட்டும், 4 யுஎஸ்பி 2.0 போர்ட்டும் உள்ளன. இவற்றில் ஒன்று கீபோர்டுக்கும் ஒன்று மவுசுக்குமாக உள்ளன. இவற்றைத் தவிர்த்து எச்டிஎம்ஐ மற்றும் விஜிஏ அவுட்புட் போர்ட்டுகளும், ஈத்தர்நெட் ஜாக், ஒரு ஆடியோ இன்புன் மற்றும் மைக்ரோபோன் இன்புட்டும் உள்ளன.

இந்த கணினியின் சிபியூவின் உள்பகுதியில் மேலும் 2 ஹார்ட் டிஸ்குகள் மற்றும் ஆப்டிக்கல் ட்ரைவை பொருத்துவதற்கான இடமும் உள்ளது. அதோடு 4 எஸ்எடிஏ போர்ட்டுகளும் உள்ளன.

ஆசஸ் எஸ்ஸன்சியோ சிஎம் 1740-40 மேசை கணினியில் வைஃபை வசதி இல்லை. ஆனால் அதற்கு பதிலாக நெட்வொர்க கார்டை இதில் பொருத்தி இண்டர்நெட்டை இயக்கலாம். இதன் மின் திறன் 350 வாட்சுகளாகும். இதில் இபியூ சிப் பொருத்தப்பட்டுள்ளதால் இது 40% மின் திறனை சேமிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பத்தை முதலில் தாங்கிவரும் மேசைக் கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசஸ் எஸ்ஸன்சியோ சிஎம் 1740-40 எஎம்டி எ8 380எபியு கொண்டுள்ளது. எனவே, இதில் அதிக சேமிப்பு வசதி இருக்கும். இதன் சேமிப்பையும் விருப்பம்போல் கூட்டிக் கொள்ளலாம். இதன் மொத்த சேமிப்பு வசதி 1டிபி ஆகும்.

ஆசஸ் எஸ்ஸன்சியோ சிஎம் 1740-40ல் அதிக திறன் கொண்ட ரேமும் உள்ளது. அதனால் வீடியோ எடிட்டிங், க்ராபிக்ஸ் டிஸைனிங் போன்ற வேலைகளை இதில் மிக அருமையாகச் செய்யலாம். மேலும் இந்த கணினி வீடியோ கேம் விளையாடுவதற்கும் மிக அருமையாக இருக்கும்.

ஆசஸ் எஸ்ஸன்சியோ சிஎம் 1740-40 ஒரு வருட உத்திரவாதத்துடன் வருகிறது. ஆனால் பெஸ்ட் பை 2 ஆண்டுகள் உத்திரவாதத்தை வழங்குகிறது. இந்த புதிய கணினி ரூ.30,000 விலையில் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X