கைக்கு அடக்கமான புதிய நெட்புக்

Posted By: Super
    X

    கைக்கு அடக்கமான புதிய நெட்புக்
    ஆசஸ் நிறுவனம் ஒரு புதிய இஇஇ பிசி 1225பி என்ற நெட்புக்கை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய நெட்புக் 11.6 இஞ்ச் அளவு டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயில் எல்இடி பேக் லிட் வசதியும் உண்டும். இதன் திரையின் பிக்சல் ரிசலூசன் 1366 x 768 ஆகும்.

    இந்த இஇஇ நெட்புக்கின் ப்ராசஸரைப் பார்த்தால் அது டூவல் கோர் எஎம்டி பீயூசன் இ450 ப்ராசஸர் ஆகும். இந்த ப்ராசஸர் 1.65 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தில் இயங்குகிறது. இந்த நெட்புக்கின் சிஸ்டம் மெமரி 2ஜிபி அல்லது 3ஜிபி டிடிஆர் 3 ஆகும். இதன் ஹார்ட் டிஸ்க் 750 ஜிபி அளவைக் கொண்டது.

    இதன் வெப் கேமரா 0.3 மெகா பிக்சலைக் கொண்டிருக்கிறது. இணைப்பு வசதிக்காக இந்த இஇஇ நெட்புக் வைபை, எச்டிஎம்ஐ இணைப்பு, விஜிஏ இணைப்பு, 2.0 மற்றும் 3.0 யுஎஸ்பி போர்ட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் மல்டி பார்மட் கார்டு ரீடரும் உண்டும். அதோடு மின் திறனிற்காக இந்த நெட்புக் 6 செல் பேட்டரியைக் கொண்டுள்ளது.

    இந்த இஇஇ ஒரு அடக்கமான நெட்புக் ஆகும். இது கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் டிசைன் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக வருகிறது. ஆனால் இதன் திறன் மிக அபாரமானது. அதே நேரத்தில் இதன் விலையும் குறைவு. இதன் முழுமையான க்யூவெர்ட்டி கீபோர்டு மிக அட்டகாசமாக அதே நேரத்தில் டைப் செய்வதற்கு வசதியாக உள்ளது. இதன் டச் பேட் 2 பட்டன்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த நெட்புக்கை மிக அழகாக இயக்க முடியும்.

    இந்த நெட்புக்கின் டிஸ்ப்ளே மிகத் தெளிவாக பளிச்சென்று இருக்கும். இதன் 0.3 மெகா பிக்சல் வெப் கேமரா இதன் முகப்பின் உச்சியில் உள்ளது. இதன் மூலம் வீடியோ கான்பரன்சிங் செய்வது மிக சுலபமாக இருக்கும்.

    இந்த நெட்புக்கின் டூவல் கோர் எஎம்டி பியூசன் ப்ராசஸர் இன்டர்நெட்டை ப்ரவுஸ் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இந்த நெட்புக்கின் விலை இன்னும் தெரியவில்லை. ஆனால் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more