Home
Computer

நோட்புக்குக்கு இணையான வசதிகளைத் தரும் புதிய டேப்லெட்!

By Karthikeyan
 நோட்புக்குக்கு இணையான வசதிகளைத் தரும் புதிய டேப்லெட்!

ஆசஸ் நிறுவனத்தின் மிகச் சிறந்த புதுமையான படைப்பு ஆசஸ் இஇஇ டேப் ட்ரான்பார்மர் ஆகும். இந்த டேப்லெட் முழு அளவிலான கீபோர்டு கொண்டு வருகிறது. இதன் டிசைன் பலரால் வரவேற்கப்பட்டதால் ஆசஸ் இன்னும் அதிகமான அளவில் இந்த வகை டிவைஸ்களை சந்தையில் களமிறக்குகிறது.

இதன் தொடர்ச்சியாக இப்போது ஆசஸ் இஇஇ பேட் ஸ்லைடர் என்ற டேப்லெட்டை களமிறக்குகிறது ஆசஸ். இந்த டிவைசில் நெட்புக்கின் வசதிகளை அனுபவிக்கலாம். இந்த டிவைசில் முழு அளவிலான கீபோர்டு உள்ளது.

இந்த ஆசஸ் இஇஇ பேட் ஸ்லைடர் டேப்லெட்டின் சிறப்புகளைப் பார்த்தால் இது ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம்ப் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே அளவு 10.1 இன்ச் ஆகும். இந்த டிஸ்ப்ளே எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் வசதியைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டிஸ்ப்ளேயின் ரிசலூசன் 1200 x 800 பிக்சல் ஆகும். இதன் ப்ராசஸர் என்விடியா டேக்ரா 2 ப்ராசஸர் ஆகும்.

இந்த ஸ்லைடர் டேப்லெட்டின் தடிமன் ட்ரான்ஸ்பார்மர் டேப்லெட்டை விட சற்று அதிகமாகும். அதற்கு காரணம் இதில் முழு அளவிலான கீபோர்டு உள்ளது. அதுபோல் இந்த டிஸ்ப்ளேயைப் பார்க்கும் கோணமும் பக்காவாக உள்ளது. அதனால் பயணத்தின் போது இந்த டேப்லெட் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இதன் டிஸ்ப்ளே கொரில்லா க்ளாஸ் கொண்டு வருவதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த ஆசஸ் இஇஇ பேட் ஸ்லைடர் டேப்லெட்டின் விலை ரூ.30,000மாக இருக்கும். இந்த டேப்லெட் மலிவு விலை லேப்டாப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X