மெமிக் புளூடூத் கன்ட்ரோல் சாதனத்துடன் வரும் புதிய டேப்லெட்

Posted By: Staff
மெமிக் புளூடூத் கன்ட்ரோல் சாதனத்துடன் வரும் புதிய டேப்லெட்
ஆசஸ் நிறுவனம் ஆசஸ் இஇஇ பேட் மெமோ என்ற புதிய டேப்லெட்டை களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட் ஒரு ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும். இந்த டேப்லெட் புத்தாண்டின் தொடக்கத்தில் வரவிருக்கிறது.

இந்த ஆசஸ் இஇஇ பேட் மெமோ டேப்லெட்டின் சிறப்பம்சங்களைப் பார்த்தால் அது 3 டைமன்சனல் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. மேலும் ப்ளூடூத் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது. இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்விஜ் ஆகும். அதுபோல் இந்த டேப்லெட் என்விடியா டேக்ரா 3 பிராசஸரைக் கொண்டுள்ளது.

ஆசஸ் இஇஇ பேட் மெமோ டேப்லெட் பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதன் மொத்த அளவே 7 இன்ச் ஆகும். அதனால் இதை எடுத்துச் செல்வது மிகவும் எளிது. இதன் முக்கிய சிறப்பு அதன் 3 டைமன்சனல் டிஸ்ப்ளே ஆகும். இதனால் இதில் படம் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும். இதன் தொடு இன்டர்பேஸ் ஸ்டைலஸ் வழியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆசஸ் இஇஇ பேட் மெமோ டேப்லட்டின் அடுத்த சிறப்பு,  அது மிமைக் ப்ளூடூத் கம்பேனியன் என்று மற்றுமொரு துணை சாதனத்தையும் கொண்டுள்ளது. மேலும், இதன் மூலம், கால் செய்ய முடியும், பாடல் கேட்க முடியும் மற்றும் பல வேலைகளைச் செய்ய முடியும். இது ஒரு ரிமோட் கண்ட்ரோல் போல் செயல்படுகிறது.

இந்த மிமைக் ஒரு மொபைல் போன் போல் தோன்றுகிறது. அதாவது இதற்கு டிஸ்ப்ளே மற்றும் இன்டர்பேஸ் பேன்றவை உண்டு. எனவே டேப்லெட்டை எடுத்துச் செல்லாமல் இந்த டிவைஸ் மூலம் கால் செய்ய முடியும். அதுபோல் இசை கேட்க முடியும். எனவே, இந்த டேப்லெட் வாடிக்கையாளர்களின் மனதைக் கண்டிப்பாக கவரும் என நம்பலாம்.

ஆசஸ் இஇஇ பேட் மெமோ டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதில் சற்று சிரமம் இருக்கிறது.

ஏனெனில் ஆன்ட்ராய்டு குழவினர் தற்போது ட்ரான்ஸ்பார்மர் பிரைமில் ஐஸ் க்ரீம் சேன்ட்விஜ்ஜை இன்கார்பரேட் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் இந்த இயங்கு தளம் மார்க்கெட்டுக்கு வருவதில் சற்று தாமதம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot