உலகின் மெலிந்த லேப்டாப்: அசஸ் வழங்கும் ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்370)

|

உலகின் மெலிந்த மற்றும் எடைக்குறைவான எடுத்துச் செல்லக்கூடிய லேப்டாப் என்ற சிறப்போடு கூடிய ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்370)-யை, அசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யூஎக்ஸ்370 லேப்டாப்பின் தடிமன் 11.2மிமீ மற்றும் 1.1 கிலோ எடைக் கொண்டது.

உலகின் மெலிந்த லேப்டாப்: அசஸ் வழங்கும் ஸென்புக் ஃபிலிப் எஸ் (யூஎக்ஸ்37

இதில் நவீன 8வது தலைமுறையைச் சேர்ந்த இன்டல் கோர் ஐ7-8550யூ செயலி உடன் போர்டில் எல்பிடிடிஆர்3 16ஜிபி ரேம் காணப்படுகிறது. இது ஒற்றை தொகுதியாக அமைந்த ஏரோஸ்பேஸ்-கிரேடு 6013 அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. தரமான லேப்டாப் அலாய்களை விட இந்தப் பொருள் எடைக் குறைந்தது என்றாலும், 50 சதவீதம் அதிக உறுதியானது.

இணைப்பு

இணைப்பு

இந்த ஸென்புக் ஃபிலிப் எஸ்-ல், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் டிஸ்ப்ளே தெளிவாக தெரியும் வகையில், மல்டிகியர் மெட்டல் மெக்கானிசம் மூலம் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட புதிய இரிகோலிஃப்ட் காணப்படுகிறது. இந்த இணைப்பு மூலம் டிஸ்ப்ளே-யை 135°-க்கு மேல் திறந்து வைத்தாலும், கீபோர்டில் தெளிவான தட்டச்சு நிலையைப் பெறும் வகையில் உயர்வுகள் மற்றும் சாய்வுகள் என்ற ஒரு இரட்டை பண்பு செயல்பாட்டை கொண்டுள்ளது. இந்த இரிகோலிஃப்ட் இணைப்பை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறப்பு மற்றும் மூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஸென்புக் ஃபிலிப் எஸ்-ல் உள்ள இரு யூஎஸ்பி-சி போர்டுகள், வெளிப்புறமான 4கே யூஹெச்டி டிஸ்ப்ளே-க்களை ஆதரிப்பதோடு, எல்லா வழிகளுக்கும் அளிக்கக் கூடிய யூஎஸ்பி-சி இணைப்பி மூலம் மின் விநியோகம் மற்றும் தகவல் பரிமாற்றம் என்று எல்லாவற்றையும் எதிர்புற மார்க்கத்திலும் பெற முடிகிறது. இந்த தொகுக்கப்பட்ட மினி டாக்-கில், ஹெச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி 3.1 போர்ட் மற்றும் விரைவாக சார்ஜிங் செய்யும் வகையிலான ஒரு யூஎஸ்பி-சி போர்ட் ஆகியவற்றை அளிக்கிறது.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உயர் கொள்ளளவு கொண்ட 39டபிள்யூஹெச் லித்தியம்-பாலிமர் பேட்டரி-யை பயன்படுத்தும் இந்த சாதனங்கள், வெறும் 49 நிமிடங்களில் 60 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் வகையில், விரைவு-சார்ஜ் தொழில்நுட்பத்தை கொண்டு செயல்படுகிறது.

உட்புற அமைப்பு

உட்புற அமைப்பு

இந்த ஃபிலிப்புக் ஃபிலிப் யூஎக்ஸ்370-ல் ஒரு 13.3-இன்ச் தொடு திரை எஃப்ஹெச்டி டிஸ்ப்ளே உடன் 300 நிட்ஸ் ஒளிர்வு மற்றும் 72% என்டிஎஸ்சி தரத்தில் அமைந்த 1920 x108 பிக்சல் பகுப்பாய்வை கொண்டுள்ளது. வெறும் 6.11மிமீ பேசில் உடன் கூடிய மிக மெல்லிய டிஸ்ப்ளே இருப்பதால், திரைக்கும் பாடிக்கும் இடையிலான விகிதம் 80 சதவீதம் அளிக்க முடிகிறது. எஃப்ஹெச்டி 1920x1080 16:9 பகுப்பாய்வு மற்றும் ஒரு இன்ச்-சிற்கு 330 பிக்சல் என்ற அடர்த்தி உடன் கூடிய இந்த டிஸ்ப்ளே, 178° விரிந்த பார்வை தொழில்நுட்பத்தை அளிப்பதால், எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் திரை தெளிவாகத் தெரிகிறது. இந்த தொடுதிரை டிஸ்ப்ளே, அசஸ் பென் போன்ற ஆற்றல் மிகுந்த எழுத்துக்குறியை ஆதரிப்பதாக உள்ளது.

ஸென்புக் ஃபிலிப் எஸ்-ல் பாதுகாப்பை மேம்படுத்தி, எளிதாக பயன்படுத்தும் வகையில், பக்கவாட்டில் ஒரு கைரேகை சென்ஸர் அளிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10-ல் நான்கு விரல்கள் வரை பயன்படுத்த, அசஸ் ஸ்மார்ட் சைகை அனுமதிக்கிறது. மேலும் டச்பேட் மூலம் உள்ளங்கை தவிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் கையெழுத்து ஆதரவு போன்ற வசதிகளைப் பெற முடிகிறது.

How to check PF Balance in online (TAMIL)
விலை

விலை

விண்டோஸ் 10-இல் அளிக்கப்படும், கார்டானா, கிளிவெர் நியூ வாய்ஸ்-கன்ட்ரோல்டு பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டெண்டு, எளிய மற்றும் பாதுகாப்பான பயோமெட்ரிக் உள்நுழைவிற்கான விண்டோஸ் ஹலோ, உள்ளுணர்வுடன் கூடிய வரைபடத்திற்கு உதவும் விண்டோஸ் இங்க், வரைய மற்றும் குறிப்பெழுத உதவும் ஒரு எழுத்துக்குறி, ஸ்லீப் மோடில் இருந்து உடனடியாக பணிக்கு திரும்ப உதவும் நவீன தரித்துநில் போன்ற பல நவீன அம்சங்களை ஆதரிக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா சில்லறை வியாபாரிகளிடமும் ரூ.1,30,990 என்ற விலை நிர்ணயத்தில் அசஸ் ஸென்புக் யூஎக்ஸ்370 கிடைக்கப் பெறும்.

மார்ச் 26-ல் இதுவரை வெளியான எல்லா செல்பீ கேமராவும் காலியாகிறது; ஏன்?

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
ASUS has announced ZenBook Flip S (UX370), the world's thinnest & lightest convertible laptop. The UX370 is 11.2mm thin and weighs just 1.1 kg, with latest 8th gen Intel Core i7-8550U processor with on-board LPDDR3 16GB RAM. It is built from a single block of aluminum alloy, a mate rial that is lighter than standard laptop alloy but 50 percent stronger.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X