Home
Computer

ஆசஸ் வழங்கும் அட்டகாசமான 2 புதிய அல்ட்ரா புக்குகள்!

By Karthikeyan

ஆசஸ் வழங்கும் அட்டகாசமான 2 புதிய அல்ட்ரா புக்குகள்!
விரைவில் தனது புதிய இரண்டு அல்ட்ரா புக்குகளை களமிறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது ஆசஸ். இந்த இரண்டு அல்ட்ரா புக்குகளும் சென்புக் வரிசையில் வருகின்றன. இந்த இரண்டு அல்ட்ரா புக்குகளும் இன்டலின் புதிய ப்ராசஸர்களையும் மற்றும் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்தையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய அல்ட்ரா புக்குகளுக்கு ஆசஸ் சென்புக் யுஎக்ஸ்21எ மற்றும் ஆசஸ் சென்புக் யுஎக்ஸ்31எ என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு அல்ட்ரா புக்குகளும் அட்டகாசமான திரைகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டும் குறைந்த எடையில் வருகின்றன. இதனால் இவற்றை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக பயணத்தின் போது இவற்றை எடுத்துச் செல்வது மிக எளிதாக இருக்கும்.

இந்த இரண்டு அல்ட்ரா புக்குகளும் மிக உறுதியானவையாகும். மேலும் இவை நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மேல் பகுதி கருப்பு நிறத்திலும் இதன் அடிப்பகுதி வெள்ளி நிறத்திலும் வருகிறது. இவை மெல்லிய லேப்டாப்புகளாகும்.

யுஎக்ஸ்21எ 11.6 இன்ச் திரையையும் யுஎக்ஸ்31எ 13.3 இன்ச் திரையையும் கொண்டிருக்கின்றன. இந்த திரை ஐபிஎஸ் எல்சிடி தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கின்றன. அதனால் இவை முழு எச்டி ரிசலூசனை வழங்குகின்றன. அதனால் இவற்றின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அல்ட்ரா புக்குகளும் ஐ3-3217யு, ஐ5-3317யு மற்றும் ஐ7-3517 ப்ராசஸர்களைக் கொண்டுள்ளன. இவற்றின் டூவல் கோர் ப்ராசஸர்கள் ஹைபர் த்ரெடிங்கை சப்போர்ட் செய்கின்றன. மேலும் இவை 256 ஜிபி எஸ்எஸ்டி மற்றும் டிடிஆர்3எல் 2ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அதோடு யுஎஸ்பி, ப்ளூடூத் மற்றும் வைபை இணைப்புகளும் இந்த அல்ட்ரா புக்குகளில் உள்ளன.

விலையைப் பார்த்தால் யுஎக்ஸ்21எ ரூ.52500க்கும் யுஎக்ஸ்31எ ரூ.55000க்கும் விற்கப்படும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X