Home
Computer

குறைந்த விலையில் வரும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

By Super

குறைந்த விலையில் வரும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!
முதன் முதலில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் சந்தைக்கு வந்த போது அது செல்வந்தர்களுக்கான சாதனங்களாகா கருதப்பட்டன. நாளடைவில் பல்வேறு நிறுவனங்கள் பலவிதமான அம்சங்களுடன் பல ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தினாலும் அவற்றின் விலை அதிகமாகவே இருந்தன. ஆனால் படிப்படியாக இப்போது ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் குறைந்த விலைக்கு வர ஆரம்பித்துவிட்டன.

தற்போது பல சிறந்த ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கின்றன. அவ்வாறு குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை வழங்குவதில் ஆர்க்கோஸ் நிறுவனம் முன்னனியில் இருக்கிறது. அந்த வகையில் இப்போது ஆர்க்கோஸ் புதிதாக ஆர்க்கோஸ் 70பி ஹனிகோம்ப் டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த ஹனிகோம்ப் டேப்லெட் மற்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆர்க்கோஸ் 70பி டேப்லெட்டின் சிறப்புகளைப் பார்த்தால் அது 1024 x 600 பிக்சஸ் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் கெப்பாசிட்டிவ் தொடு திரையைக் கொண்டிருக்கிறது. அதோடு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் ரேம் 512 எம்பி அளவைக் கொண்டுள்ளது. மேலும் 3டி க்ராபிக்ஸ் அக்சிலரேட்டிங் யூனிட் இந்த டேப்லெட்டில் இன்பில்டாக வருகிறது. இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு வி3.2 ஹனிகோம்ப் ஆகும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த ஆர்க்கோஸ் டேப்லெட் எச்டிஎம்ஐ அவுட்புட் மற்றும் மைக்ரோஎஸ்டி மெமரி கார்டு ஸ்லாட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும் 802.11 பி/ஜி/என் வைபை இன்டர்நெட் இணைப்பு இந்த டேப்லெட்டில் அடக்கம். அதோடு இந்த டேப்லெட் 3ஜி இன்டர்நெட் இணைப்பையும் வழங்குகிறது. அதனால் இது பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் வலிமை கொண்டுள்ளது.

இந்த ஆர்க்கோஸ் டேப்லெட் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கிறது. இதில் உள்ள வைபை மூலம் வீடியோக்கள் மற்றும் படங்களை அகன்ற திரையில் பார்க்க முடியும்.

இந்த டேப்லெட் மிக விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.11,000 மட்டுமே. கண்டிப்பாக விற்பனையில் சாதனை படைக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X