இந்திய சந்தையில் ஆப்பிளின் நியூ ஐபேட் டேப்லட்!

By Super
|

இந்திய சந்தையில் ஆப்பிளின் நியூ ஐபேட் டேப்லட்!
வெளிநாடுகளில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஆப்பிள் நியூ ஐபேட் டேப்லட்டை இனி இந்தியாவிலும் வெளியாகும். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளில் வெளியான நியூ ஐபேட் டேப்லட், எப்போது இந்தியாவில் வெளியாகும் என்று பல வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். இந்த காத்திருப்பை நீட்டிக்க விடாமல், இந்தியாவில் நியூ ஐபேட் டேப்லட்டை வெளியிட்டு அனைவரையும் குஷிப்படுத்த முடிவு செய்துள்ளது ஆப்பிள்.

9.7 இஞ்ச் தொடுதிரையை கொண்ட இந்த டேப்லட் ரெட்டினா டிஸ்ப்ளே தொழில் நுட்பத்தினையும் கொண்டது. 2048 X 1536 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். இதில் ஆப்பிள் ஏ5எக்ஸ் பிராசஸர் மற்றும் சிறப்பான வீடியோ ரெக்கார்டிங் வசதியினை கொடுக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.

இந்திய சந்தையில் ஆப்பிள் நியூ ஐபேட் டேப்லட் ரூ.36,799 விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நியூ ஐபேட் வெளியாகும் தேதி பற்றிய தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X