Home
Computer

ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன மேக் ப்ரோ சாதனம் அறிமுகம்.!

ப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேக் ப்ரோ சாதனத்தின் வடிவமைப்பு முந்தைய மேக் ப்ரோவை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது

ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய மேக் ப்ரோ சாதனம் அதிநவீன வடிவமைப்பில் சிறந்த செயல்திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிராஷ்கேன் வடிவமைப்பு

டிராஷ்கேன் வடிவமைப்பு

குறிப்பாக இந்த கணினி சிறப்பாக செயலாற்றும் வகையில் 6கே எச்டிஆர் மாணிட்டரான ப்ரோ டிஸ்பிளே எச்டிஆர் மாடலையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும் டிராஷ்கேன் வடிவமைப்பு, குறைவான அப்கிரேடுகள் காரணமாக 2017-ம் ஆண்டே ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ சாதனத்தை மேம்படுத்துவதாக அறிவித்தது, பின்பு மேக் ப்ரோ காலதாமதமாகி நேற்று நடைபெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 மெஷ் பேனல்

மெஷ் பேனல்

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேக் ப்ரோ சாதனத்தின் வடிவமைப்பு முந்தைய மேக் ப்ரோவை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் புதிய மேக் ப்ரோவும் ஸ்டீல் பாடி, முன்புறம் மெஷ் பேனல் மற்றும் மேல்புற கைப்புடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனர்களே இயக்கக்கூடிய எட்டு pcie ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

 இன்டெல் சியான் பிராசஸர்

இன்டெல் சியான் பிராசஸர்

இதனுடன் ஆப்பிள் புதிதாக mpx மாட்யூல் ஒன்றையும் வடிவமைத்துள்ளது, குறிப்பாக இது pcie மற்றும் தண்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டியை இணைக்கிறது, பிறகு இதன் மூலம் கணினி மிக எளிதாக குளிர்ச்சி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ப்ரோ மாடலில் 8-கோர், 3.5 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் சியான் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

 MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி

MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி

குறிப்பாக இது 12 கோர், 16 கோர், 24 கோர் மற்றும் 28 கோர் போன்ற ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இதன் மெமரி 1.5 டி.பி. (1500 ஜி.பி.) துவங்கி பயனர்கள் அதிகபட்சம் இரண்டு MPX மாட்யூல்களை கான்ஃபிகர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவற்றுடன் AMD ரேடியான் வீகா II ஜி.பி.யு.க்களும் அதிகபட்சம் 56 டெராஃபிளாப்கள் கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

இந்த சாதனத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.4,15,220-ஆக உள்ளது. பின்பு இந்த கணினியில் 32 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் AMD ரேடியான் ப்ரோ 580X வழங்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த சாதனத்தின் இணைப்பு ஆதரவுகள் பொறுத்தவரை தண்டர்போர்ட் 3, யுஎஸ்பி டைப் ஏ, ஈத்தர்நெட் போர்ட்கள், வைபை, ப்ளூடூத் 5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. மேலும் மேக் ப்ரோ சாதனம் ஆட்-இன் வீடியோ
அக்சல்லரேட்டர் கார்டு ஆகும். இதை கொண்டு 8மு தரத்தில் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும்.

6கே மாணிட்டர்

6கே மாணிட்டர்

இந்த மேக் ப்ரோ சாதனத்துடன் ஆப்பிள் நிறுவனம் ப்ரோ டிஸ்பிளே மாடலை அறிமுகம் செய்துள்ளது, இது எச்டிஆர் 32-இன்ச் 6கே மாணிட்டர் ஆகும். இது அதிகபட்சம் 1600நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1,000,000:1 காண்டிராஸ்ட் ரேஷியோ
கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாணிட்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,45,933-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
apple-wwdc-mac-pro-2019-6k-apple-pro-display-xdr-unveiled : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X