Home
Computer

கொஞ்சம் காத்திருங்கள்... விரைவில் ஆப்பிள் ஐபேட்-3!

By Karthikeyan
கொஞ்சம் காத்திருங்கள்... விரைவில் ஆப்பிள் ஐபேட்-3!

வரும் மார்ச் முதல் வாரத்தில் ஐ பேட் 3ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது. இந்த பிப்ரவரி மாதத்தில் எந்த ஒரு சிறப்பு அறிவிப்பும் ஆப்பிளிடமிருந்து இருக்கப் போவதில்லை.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள எர்பா பியூனா கலை மையத்தில் ஆப்பிள் ஐபேட் 3 அறிமுகம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு பெரிய நிகழ்வையும் ஆப்பிள் இந்த மையத்தில்தான் வழக்கமாக நடத்தும்.

ஆனால் எந்த தேதியில் இந்த அறிமுகம் நடக்க இருக்கிறது என்பது அறிவிக்கப்படவில்லை. அதாவது ஆப்பிள் ஐபேட்2ன் சில்லறை வர்த்தகத்திற்கான அறிவிப்பு நடக்கும் அன்றே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் அறிவிப்பு வெளியான அடுத்த வாரமே ஐபேட் 3 விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

இந்த ஐபேட் 3 அடுத்த தலைமுறைக்கான ஐபேடாக இருக்கும் என்ற எண்ணற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஐபேட் ஆப்பிள் ஐபேட் 2வைப் போல் இருந்தாலும் இதன் வேகம் 2வை விட அதிகமாக இருக்கும். அதற்கான மேம்படுத்தப்பட்ட ப்ராசஸிங் யுனிட் மற்றும் 2048×1536 ரெட்டினா டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் இந்த ஐபேட் 3ல் உள்ளன.

2011 ஐபேட் 2ன் ஆண்டு என்றால் 2012 ஐபேட் 3ன் ஆண்டாக இருக்குமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகிறது. ஆனால், ஆப்பிள் ஐபேட் 3 குறித்து ஆப்பிள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதையும் வெளியிடப்படவில்லை.

ஆனால் இந்த கேள்விகள் மற்றும் வதந்திகளுக்கெல்லாம் ஆப்பிள் பதில் சொல்லாது என்று ஆப்பிளின் அதிகாரி தெரிவித்திருக்கிறார். எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் ஆப்பிள் ஐபேட் 3 வந்துவிடும் என நம்புவோமாக.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X