Home
Computer

மெல்லிய புதிய ஐமேக் மேசைக் கணினியை களமிறக்கும் ஆப்பிள்

By Karthikeyan
மெல்லிய புதிய ஐமேக் மேசைக் கணினியை களமிறக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய மெல்லிய ஐமேக் மேசைக் கணினியை வரும் நவம்பர் 30 அன்று களமிறக்க இருக்கிறது. இந்த புதிய ஐமேக் கணியை வரும் வெள்ளிக் கிழமை முதல் ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.

இந்த ஐமேக் 2 மாடல்களில் வருகிறது. அதாவது 27 இன்ச் அளவில் எல்இடி டிஸ்ப்ளேயைக் கொண்ட ஒரு மாடலும் 21.5 இன்ச் அளவில் எல்இடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட இன்னொரு மாடலுமாக இரண்டு மாடல்களில் வருகிறது. இதில் 21.5 இன்ச் மாடல் இந்த மாதம் விற்பனைக்கு வருகிறது. 27 இன்ச் மாடல் வரும் டிசம்பரில் விற்பனைக்கு வருகிறது.

இந்த 21.5 இன்ச் ஐமேக்கை ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரான www.apple.comலும் மற்றும் ஆப்பிளின் அங்கீகாரம் பெற்ற கடைகளிலும் வாங்கலாம். மேலும் ஐமேக் 27 இன்ச் மாடலை வாங்க இப்போதே ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் விண்ணப்பிக்கலாம்.

21.5 ஐமேக் 1,299 அமெரிக்க டாலர்களுக்கும் 27 இன்ச் மாடல் 1,799 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 27 இன்ச் மாடல் ஐமேக்கில் கோர் ஐ5 அல்லது கோர் ஐ7 ப்ராசரில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்திய மதிப்பில் 21.5 இன்ச் ஐமேக் ரூ.85,900க்கும், 27 இன்ச் மாடல் ரூ.99,990க்கும் விற்கப்படும் என்று தெரிகிறது.

இந்த புதிய ஐமேக் கணினி 3ஜி குவாட்கோர் இன்டல் கோர் ஐ ப்ராசஸர்களுடன் களம் இறங்குகிறது. இதில் கோர் ஐ7 ப்ராசஸரை அப்க்ரேட் செய்ய முடியும். மேலும் இதில் என்விடியா ஜிஇபோர்ஸ் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி 1600 மெகாஹெர்ட்ஸ் மெமரி மற்றும் 1டிபி ஹார்ட் ட்ரைவ் உள்ளதால் இந்த ஐமேக் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த ஐமேக்கில் வரும் சேமிப்புக்கு பியூசன் ட்ரைவ் என்று ஆப்பிள் பெயர் சூட்டி இருக்கிறது. இது 128ஜிபி எஸ்எஸ்டி ஹார்ட் ட்ரைவ், 1டிபி அல்லது 3டிபி எச்டிடி அளவைக் கொண்டது. மேலும் இந்த ஐமேக்கில் மைக்ரோ எஸ்டி கார்டு, யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் தன்டர்போல்ட் போர்ட்டுகளும் உள்ளன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X