பல வண்ணங்களில் வெளியாக இருக்கும் 12 இன்ச் மேக்புக் ஏர் பற்றி உங்களுக்கு தெரியுமா

Written By:

முதல் தலைமுறை ஐ பாட் மூலம் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் 12 இன்ச் மேக்புக் ஏர் மாடல்களை ஸ்பேஸ் க்ரே மற்றும் கோல்டு வண்ணங்களில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய மேக்புக் ஏர் புதிய வண்ணங்களில் வெளியாவதோடு ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்களும் ஒரே வண்ண்ங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

பல வண்ணங்களில் வெளியாக இருக்கும் 12 இன்ச் மேக்புக் ஏர்

12 இன்ச் மேக்புக் ஏர் வகைகளை 2015 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது.மேலும் புதிய மேக்புக் வகைகளில் ஸ்பெஷல் எடிஷன் வண்ணங்களில் வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஆப்பிளின் அடுத்த திட்டத்தை சரியாக கனிக்க முடியாத நிலையில் அந்நிறுவனம் புதிய மேக்புக் வகைகளை பல வண்ணங்களில் வெளியிடுவதன் மூலம் பல பெண் வாடிக்கையாளர்களை பெற முடியும் என்பது உறுதி.

கடைசியாக கிடைத்த தகவலின்படி ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் வகைகளை எதிர்காலத்தில் வெளியிடலாம் என்றும் இன்டெலின் புதிய சிப்செட்டுடன் நீண்ட பேட்டரி கொடுக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot