புதிய டேப்லட் மற்றும் டிவியை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

By Super
|

புதிய டேப்லட் மற்றும் டிவியை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!
புதிய தொழில் நுட்பங்களை எதிர் பார்த்த வண்ணம் வாடிக்கையாளர்கள் இருக்க, அந்த எதிர் பார்ப்பை நிஜமாக்கி இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். கடந்த மார்ச் 7-ஆம் தேதி நியூ ஐபேட் டேப்லட் மற்றும் நியூ ஆப்பிள் டிவி மின்னணு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்நிறுவனம் ஆப்பிள் ஐபேட்-3 டேப்லட்டை அறிமுகம் செய்யும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் பெயரில் மட்டும் சிறிய மாற்றம் கொடுத்து, நியூ ஐபேட் டேப்லட்டை வாடிக்கையாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இந்த நியூ ஐபேட் 9.7 இஞ்ச் திரையினை கொண்டு்ள்ளதால், 2048 X 1536 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவில், ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது போலவே ஆப்டிக் சென்ஸார் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் பெற முடியும்.

4ஜி எல்டிஇ நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த நியூ ஐபேட் டேப்லட்டில் ஏ5-எக்ஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நியூ ஐபேட் டேப்லட்டை பொருத்த வரையில் 2 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். வைபை டேப்லட் மற்றும் வைபை + 4ஜி என்ற இரண்டு புதிய வெர்ஷனை உருவாக்கி உள்ளது ஆப்பிள். இந்த இரண்டு மாடல்களிலுமே 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

16 ஜிபி கொண்ட வைபை டேப்லட் ரூ.24,907 விலையிலும், 32 ஜிபி மாடல் ரூ. 29,899 விலையிலும், 64 ஜிபி ரூ.34,896 விலையிலும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதே போல் 16 ஜிபி கொண்ட வைபை + 4ஜி ஐபேட் டேப்லட் ரூ.31,402 விலையிலும், 32 ஜிபி மெமரி கொண்ட 4ஜி வெர்ஷன் ரூ.36,395 விலையிலும், 64 ஜிபி மெமரி கொண்ட ஐபேட் 4ஜி வெர்ஷன் ரூ.41,387 விலையிலும் கிடைக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், கன்னடா, ஸ்விட்ஸர்லாந்து, ஜெர்மெனி, பிரெஞ்சு, ஹாங்காங், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வருகிற மார்ச் மாதம் 10-ஆம் தேதி நியூ ஐபேட் டேப்லட் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய டிவியும் உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் என்று உறுதியாக நம்பலாம். இன்னும் இந்த நியூ டேப்லட் மற்றும் டிவி பற்றிய தொழில் நுட்ப விவரங்களை கூடிய விரைவில் தெளிவாக வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X