புத்தாண்டில் ஆப்பிள் வழங்கும் புதிய ஐபேட்கள்!

By Super
|

புத்தாண்டில் ஆப்பிள் வழங்கும் புதிய ஐபேட்கள்!
எத்தனை வதந்திகள் வந்தாலும் அது ஆப்பிள் நிறுவனத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் ஆப்பிளின் ஐபேட் வாடிக்கையாளர்களை அவை மிக அதிகமாகவே பாதிக்கின்றன. குறைந்த காலத்திலேயே ஆப்பிள் உலக அளவில் மிகப் பிரபலமான நிறுவனம் ஆகும். ஒவ்வொரு வருடமும் ஆப்பிளின் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இத்தகைய உயர்ந்த பெயரைப் பெற்ற இந்த ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி இப்போது ஏராளமான வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த வதந்திகளில் சில அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி வந்திருக்கும் வதந்தி சற்று ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த வதந்திகளை இணையதளங்கள் விடாமல் பரப்பி வருகின்றன. அதாவது புத்தாண்டில் ஐபேட்களுக்கான ஆப்பிளின் புதிய திட்டங்களைப் பற்றி இந்த வதந்திகள் வருகின்றன. டிஜிடைம்ஸ் கூறும் போது வரும் ஜனவரி 26ல் நடக்கும் மேக் வேர்ல்டு அல்லது ஐ வேர்ல்டு கான்பரன்சில் வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெற இருப்பதாகக் கூறுகிறது.

டிஜிடைம்ஸின் கூற்றுப்படி ஆப்பிள் ஐபேடு 2 எஸ் என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபேட் 3 மற்றும் நடுத்தர டேப்லெட்டுகளை புத்தாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கிறது.

ஜனவரி 2010ல் ஆப்பிள் தனது முதல் ஐபேடை அறிமுகப்படுத்தியது. அதுபோல் ஆப்பிள் ஐபேட் 2 மார்ச் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது திடீரென்று ஒரு புதிய ஐஒஎஸ் டேப்லெட் ஸ்டீவ் ஜாப் அவர்களின் பிறந்த தினம் அன்று அறிமுகப்படுத்துகிறது என்ற வந்திருக்கிறது. மேலும் ஆப்பிள் ஐபேடு 2 டேப்லெட்டின் விலையைக் கணிசமான அளவில் குறைக்க இருக்கிறது. அதன் மூலம் அமேசான் கின்டில் பயர் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுடன் போட்டி போட முடியும் என நம்புகிறது. ஏனெனில் இந்த சீசனில் கின்டில் பயரின் விற்பனை ஐபேடின் விற்பனையத் தாண்டி இருக்கிறது.

மேலும் ஆப்பிளின் வரவிருக்கும் புதிய ஐபேடுகள் 2048 x 1536 பிக்சல் ரிசலூசன் கொண்டிருக்கும் ரெட்டினா டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்ற வதந்தி வருகிறது. இது தற்போதைய ஐபேட்களை விட 4 மடங்கு அதிகமான சக்தியாகும். மேலும் டபுள் எல்இடி லைட் பார் கொண்டிருப்பதால் புதிய ஐபேட்களின் டிஸ்ப்ளே மிகவும் பளிச்சென்று இருக்கும். மேலும் இந்த புதிய மாடல்கள் க்யுஎக்ஸ்ஜிஎ ரிசலூசனைக் கொண்டிருக்கும் என்ற செய்தியும் வருகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X