Home
Computer

இந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.!

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

 ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச்

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச்

அதன்படி இந்நிறுவனம் ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்தசாதனம் சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளத என்பது
குறிப்பிடத்தக்கது. இப்போது ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச்

ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச்

புதிய ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல் 16-இன்ச் ரெடினா டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3072 x 1920 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல் ஆக்டோ-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர் வசதிம்றும் 2.3ஜிகாஹெர்ட் ஃபேஸ் கிளாக்வேகம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுஎன அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

512 ஜிபி / 1 டிபி எஸ்.எஸ்.டி வரை

512 ஜிபி / 1 டிபி எஸ்.எஸ்.டி வரை

வன்பொருள் அம்சங்களில் 8 ஜிபி விஆர்ஏஎம் மற்றும் ஜிடிடிஆர் 6 வீடியோ மெமரி கொண்ட புதிய ஏஎம்டி ரேடியான் புரோ 5000 எம் சீரிஸ் கிராபிக்ஸ் இவற்றுள் அடங்கும்.மேலும், 64 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி / 1 டிபி எஸ்.எஸ்.டி வரை மெமரி ஆதரவு உள்ளது. குறிப்பாக சில்வர்மற்றும் கிரே நிறத்தில் இந்த ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் சாதனம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வூஃப்பர் அம்சம்

மேலும் டச் ஐடி மற்றும் டச் பார் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல். பின்பு மேஜிக் கீபோர்டு மற்றும் ஆறு ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் வெளிந்துள்ளது இந்த ஆப்பிள் சாதனம். குறிப்பாக வூஃப்பர் அம்சம் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

 இணைப்பு ஆதரவுகள் மற்றும் விலை

இணைப்பு ஆதரவுகள் மற்றும் விலை

இந்த ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் சாதனத்தில் புளூடூத் 5.0, எச்டி 720p வெப்கேம், 4 எக்ஸ் தண்டர்போல்ட் 3 யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்,ஹெட்போன் ஜாக், டிஸ்பிளே போர்ட், வைஃபை போன்ற இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் 100வாட் பேட்டரிஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக
ரூ.1,99,990-விலையில் இந்த மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடலை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Apple MacBook Pro 16 inch Laptop Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X