புதிய கிராபிக்ஸ் பிராசஸருடன் ஆப்பிள் லேப்டாப்?

மேக்புக் காலத்திற்கு ஏற்ப அப்க்ரேட் செய்யப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனம் தமது லேப்டாப்புகளில் புதுமையான தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பல கணினி நிறுவனங்களுடன் கைகோர்த்து இருக்கிறது.
அந்த வரிசையில் ஆப்பிள் தனது அடுத்த தலைமுறை மேக்புக் லேப்டாப்புகளில் ஏஎம்டி சிப்செட்டுக்குப் பதிலாக என்விஐடிஐஏ சிப்செட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிப்செட் ஏஎம்டி மற்றும் இன்டெல் ப்ராசஸரைவிட கிராபிக்சில் மிகச் சிறப்பாக இருக்கும்.
ஆப்பிள் மேக்புக்குகள் தொடக்கத்திலிருந்தே கிராபிக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. அதாவது கிராபிக்ஸைப் பொருத்தவரை மேக்புக்குகள் சிறப்பாக இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது. எனவே, மார்க்கெட்டில் கலக்கி வரும் என்விஐடிஐஏ கிராபிக்ஸ் பிராசஸருடன் மேக்புக்கை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேக்புக் லேப்டாப்புகளில் க்ராபிக்ஸ் வசதி மிக முக்கியமானதாக இருக்க வேண்டுமென்று ஆப்பிள் கருதுகிறது. அதனால் அது தனியாக க்ராபிக்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது இண்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் கார்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே ஆப்பிள் தற்போது ஏஎம்டியை விட்டுவிட்டு என்விடியாவை க்ராபிக்ஸ் பிராசஸரை தேர்ந்து எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிக திறன் கொண்ட ஆப்பிள் லேப்டாப்புகளில் க்ராபிக்ஸ் வசதிகளை சிறப்பாக வழங்கும்.


Click it and Unblock the Notifications