Home
Computer

ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் தாமதம் ஆகிறதா?

இந்த மேக்புக் ஏர் தயாரிப்பின் அடுத்தகட்ட பணி இரண்டாவது காலாண்டில் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இவ்வாண்டு இறுதியில் தான் தொடங்கப்படும் என தெரிகிறது.

By Siva Lingam

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான மேக்புக் ஏர் இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த டிவைஸ் வெளியீடு தாமதமாகும் என தெரிகிறது. இந்த 13 இன்ச் மேக்புக் ஏர் குறைந்த விலையில் இரண்டாவது காலாண்டில் உலக டெவலப்பர் மாநாட்டில் வெளியிடலாம் என்று கூறாட்டது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த லேப்டாப் இரண்டாவது காலாண்டில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் ரிலீஸ் எப்போது?


இந்த மேக்புக் ஏர் தயாரிப்பின் அடுத்தகட்ட பணி இரண்டாவது காலாண்டில் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இவ்வாண்டு இறுதியில் தான் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்த மேக்புக் ஏர் லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.53,300 என்ற விலையில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் இதன் விலை 10% குறைய வாய்பு இருப்பதாகவும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை வெளியிடும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சில மேக்புக் ஏர் பாகங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ள சப்ளையர்கள் இப்போது புதிய சாதனங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஆப்பிள் தொடங்கும் வரை உயர்ந்த சரக்குகள் மற்றும் குறைந்த திறன் பயன்பாடு ஆகியவற்றால் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாமதத்திற்கு ஆப்பிள் நிறுவனம் இன்னும் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை, ஆனால் செயலிகளைப் போன்ற முக்கிய கூறுபாடுகளுடன் ஏதாவது செய்ய முடியும் என்று அதன் அறிக்கை தெரிவிக்கின்றது. ஐபோன், ஹோப்சொட் மற்றும் மேக்புக் ஏர் உள்ளிட்ட பல தயாரிப்புகளின் உற்பத்தியை ஆப்பிள் ஒத்திவைத்துள்ளது என்பதும் ஒருசில செய்திகளால் தெரிய வந்துள்ளது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் ரிலீஸ் எப்போது?


மேலும் இந்த புதிய மேக்புக் ஏர் லேப்டாப் ஸ்லிம் ஆகவும், ஹை ரெசலூசன் ரெட்டினா ஸ்கிரீனை கொண்டதாகவும், மேலும் லேட்டஸ்ட் இண்டெல் பிராஸசரை கொண்டதாகவும் இருக்கும் என்பதால் ஆப்பிள் நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பாக இது கருதப்படுகிறது.

புதிய ஆப்பிள் மேக்புக் ஏர் லேப்டாப் ரிலீஸ் எப்போது?


இந்த ஆப்பிள் ஏர்புக் முதலில் கடந்த 2008ஆம் ஆண்டு அப்போதைய இந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களால் சான்பிராஸிஸ்கோவில் நடந்த ஒரு எக்ஸ்போவில் தொடங்கப்பட்டது. ஆனாலும் கடந்த 2015ஆம் ஆண்டு வரை இது அப்டேட் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக 12 இன்ச் மேக்புக் மற்றும் மேக்புக் புரோ அறிமுகமானது. இந்த 13 இன்ச் மேக்புக் ஏர், கல்லூரி மாணவர்களின் வசதிகாக ரூ.66,600 விலையில்128 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும். இதில் 1.8GHz டூயல்கோர் ஐ5 பிராசசர், மற்றும் 8ஜிபி LPDDR3 ரேம் ஆகியவை உண்டு. இந்தியாவில் இதன் விலை ரூ.77,200 என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வெளியாகும்போது இதன் விலை குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு நடந்த WWDC மாநாட்டில் அறிவித்தபடியே இந்த ஆண்டு நிகழ்ச்சியிலும் ஆப்பிள் நிறுவனம் புதிய தயாரிப்புகள் அறிவிப்புகளை எந்த நேரத்திலும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple MacBook Air Refresh Reportedly Delayed, May Launch at Lower Price ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X