Home
Computer

ஆப்பிள் ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி டேப்-2 ஒப்பீடு!

By Super

ஆப்பிள் ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி டேப்-2 ஒப்பீடு!
மின்னணு சாதன உலகில் நிறைய சிறப்பான தொழில் நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக எலக்ட்ரானிக் சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் ஏக போட்டியாக இருக்கிறது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஆயுதமாக ஐபேட் மினி டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஆப்பிள் ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி டேப்-2 ஆகிய 2 டேப்லட்டிற்கும் ஓர் சிறிய ஒப்பீட்டினை பார்க்கலாம்.

ஐபேட் மினி டேப்லட் 7.9 இஞ்ச் திரை வசதி கொண்டதாகவும், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப்-2 டேப்லட் 7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். ஐபேட் மினி டேப்லட்டின் 7.9 இஞ்ச் திரை வசதியின் மூலம் 1024 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இந்த திரையில் ரெட்டினா தொழில் நுட்பத்தினை பெற முடியும்

என்பதால், தகவல்களை மிக தெளிவாக பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி டேப்-2 டேப்லட்டில் 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியம் கிடைக்கும்.

ஐபேட் மினி டேப்லட்டில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் ஏ-5 பிராசஸரினை பெறலாம். கேலக்ஸி டேப்-2 டேப்லட்டும் 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் ஓஎம்ஏபி 4430 பிராசஸரை கொடுக்கும். கேலக்ஸி டேப்-2 டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஆப்பிளின் புதிய ஐபேட் மினி டேப்லட் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் செயல்படும்.

கேமரா வசதியினை ஒப்பிட்டு பார்க்கையில் ஐபேட் மினி டேப்லட் சிறப்பான கேமரா வசதியினை கொண்டதாக இருக்கும் என்று கூறலாம். இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.2 மெகா பிக்ஸல் கொண்ட ஐசைட் கேமராவினையும் பயன்படுத்த முடியும். கேலக்ஸி டேப்-2 டேப்லட் 3 மெகா பிக்ஸல் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் விஜிஏ முகப்பு கேமராவினையும் வழங்கும்.

சாம்சங் கேலக்ஸி டேப்-2 டேப்லட் 8ஜிபி/16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்டதாகவும், ஐபேட் மினி டேப்லட் 16 ஜிபி/32ஜிபி/64 ஜிபி ஆகிய இன்டர்னல் மெமரி வசதியையும் வழங்கும். சிறந்த தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இந்த டேப்லட்டில் பேட்டரி வசதியினையும் பெற முடியும். 16.3 டபிள்யூஎச்ஆர் லித்தியம் பாலிமர் பேட்டரி இருப்பதால் 10 மணி நேரம் பேட்டரி பேக்கப் வசதியை வழங்கும்.

கேலக்ஸி டேப்-2 டேப்லட் 4,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 20 மணி நேரம் டாக் டைம் மற்றும் 800 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். ஐபேட் மினி டேப்லட்டின் 16 ஜிபி வெர்ஷன் ரூ. 31,874, 32 ஜிபி மெமரி வெர்ஷன் ரூ. 38,819 விலையினையும் மற்றும் 64 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 45,763 விலையினையும் கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. கேலக்ஸி டேப்-2 டேப்லட் ரூ. 19,700 விலையினை கொண்டதாக இருக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X