Home
Computer

ஐபேட் மினியுடன் போட்டிக்கு தயாராகும் சூப்பர், டூப்பர் டேப்லட்கள்!

By Super

ஐபேட் மினியுடன் போட்டிக்கு தயாராகும் சூப்பர், டூப்பர் டேப்லட்கள்!
கடந்த செவ்வாய் கிழமையன்று ஐபேட் மினி டேப்லட் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள் குட்டி ஐபேட் மினி டேப்லட்டுடன் போட்டி போட இரண்டு டேப்லட்கள் தயாராக நிற்கிறது. அமேசான் கிண்டில் ஃபையர் எச்டி மற்றும் கூகுள் நெக்சஸ்-7 ஆகிய டேப்லட்கள் தான் அந்த போட்டி போடும் டேப்லட்கள். இதனால் இந்த மூப்பெரும்

டேப்லட்களை கொஞ்சம் ஒப்பிட்டு பார்க்கலாம். சமீபத்தில் ஐபேட் மினி டேப்லட்டை பாதுகாக்க ஐபேட் மினி கேஸும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

16 ஜிபி வெர்ஷன் கொண்ட ஐபேட் மினி டேப்லட் 7.9 இஞ்ச் திரையுடன் $329 விலை கொண்டதாக இருக்கிறது. அதே 16 ஜிபி வெர்ஷனில் வைபை வசதியுடன் கூடிய டேப்லட் $429 விலைதொட்டு ஆரம்பமாகிறது. கூகுள் நெக்சஸ்-7 டேப்லட்டின் விலை பற்றியும் பார்க்கலாம். கூகுளின் நெக்சஸ்-7 டேப்லட்டில் 32 ஜிபி வெர்ஷன் கொண்ட $249 விலையினையும், 16 ஜிபி வெர்ஷன் $199 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

கிண்டில் ஃபையர் டேப்லட்டிலும் 16 ஜிபி மற்றும், 32 ஜிபி வெர்ஷனின் விலை விவரத்தினை தெரிந்து கொள்ளலாம். 32 ஜிபி வெர்ஷன் $249 விலையினையும், 16 ஜிபி வெர்ஷன் டேப்லட் $199 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

ஐபேட் மினி டேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரினை வழங்கும். நெக்சஸ்-7 டேப்லட் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் என்வீடியா டெக்ரா-3 குவாட் கோர் வேகம் கொண்ட பிராசஸரினையும், கிண்டில் ஃபையர் எச்டி டேப்லட்டில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரையும் பெறலாம்.

நெக்சஸ்-7, கிண்டில் ஃபையர் எச்டி ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் ஐபேட் மினி டேப்லட்டின் திரை சற்று அதிகமாக தான் இருக்கும். நெக்சஸ்-7 டேப்லட்டின் 7 இஞ்ச் திரையில் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். ஆனால் ஐபேட் மினி டேப்லட்டில் கொஞ்சம் அதிகமாக 1024 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.

ஐபேட் மினி டேப்லட் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் பெற முடியும். மற்ற 2 டேப்லட்களான நெக்சஸ்-7 மற்றும் கிண்டில் ஃபையர் டேப்லட்களில் மெயின் கேமரா கொடுக்கப்படவில்லை. ஆனால் முகப்பு கேமரா வசதி உண்டு. கூகுள் நெக்சஸ் டேப்லட்டில் 1.2 மெகா பிக்ஸல்

கேமராவையும், கிண்டில் ஃபையர் எச்டி டேப்லட்டில் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவையும் பயன்படுத்த முடியும்.

எல்லா தொழில் நுட்பத்தின் தகவல்களையும் பார்த்துவிட்டு மிக முக்கியமான இயங்குதளம் பற்றிய தகவல்களை பார்க்கவில்லை என்றால் எப்படி? இதன் இயங்குதளம் பற்றிய தகவல்களும் இதோ! ஐபேட் மினி டேப்லட் ஆப்பிள் படைப்பு என்பதால் நிச்சயம் ஐஓஎஸ் இயங்குதளத்தினை தான் கொண்டிருக்கும். ஐபேட் மினி டேப்லட்டில் ஆப்பிள் ஐஓஎஸ்-6 புதிய இயங்குதளத்தினை பெற முடியும். கூகுள் நெக்சஸ்-7 டேப்லட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.1 இயங்குதளத்தினை வழங்கும். இதில் 4.1.2 இயங்குதளத்தின் அப்கிரேட் வசதியினையும் பெறலாம் என்கிறது இந்த டேப்லட்.

இன்னும் இந்த ஐபேட் மினியின் இந்திய விலை விவரங்கள் வெளியான பின், இந்த டேப்லட் பற்றிய சிறப்பானதொரு விலை விவரத்தினை நிச்சயம் நமது தமிழ் கிஸ்பாட்டில் மேற்பார்வை இடலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X