புதிய ஐபேட் 3 மற்றும் ஐபேட் மினி - ஒரு ஒப்பீடு

Posted By: Karthikeyan
புதிய ஐபேட் 3 மற்றும் ஐபேட் மினி - ஒரு ஒப்பீடு

ஆப்பிள் தனது புதிய ஐபேட் மினி வைபை டேப்லெட்டை வரும் நவம்பர் 2ல் உலகம் முழுவதும் களம் இறக்க இருக்கிறது. இந்த டேப்லெட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது. மேலும் 30 நாடுகளில் வரும் அக்டோபர் 26 முதல் ஐபேட் மினியை வாங்க பிரீ ஆடர் செய்யலாம்.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இந்த ஐபேட் மினியின் விலையை இன்னும் ஆப்பிள் அறிவிக்கவில்லை. இருந்தாலும் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி ஐபேட் மினி வைபை ப்ளஸ் செல்லுலர் டேப்லெட்டுகள் ரூ.31,874, ரூ.38,819 மற்றும் ரூ.45,763 ஆகிய விலைகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஆப்பிளின் புதிய ஐபேட் 3 இந்தியாவில் சூப்பராக விற்பனையாகி வருகிறது. இந்த டேப்லேட் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய மாடல்களில் விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த டேப்லெட் ரூ.30,500, ரூ.36,500 மற்றும் ரூ.42,500 ஆகிய விலைகளில் விற்பனையாகி வருகின்றன.

புதிய ஐபேட் 3 மற்றும் ஐபேட் மினி ஆகியவை ஏறக்குறைய சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக ஐபேட் மினி 7.9 இன்ச் எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. ஆனால் ஐபேட் 3 டேப்லெட் 9.7 இன்ச் அளவில் எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் எல்சிடி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது.

இந்த இரண்டு சாதனங்களும் 1ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ஆப்பிள் எ5 ப்ராசஸருடன் வருகின்றன. மேலும் இந்த இரண்டும் ஐஒஎஸ் 6 இயங்கு தளத்தில் வருகின்றன. அதனால் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் மிக சூப்பரான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.

கேமராக்களைப் பொருத்தவரை இரண்டு டேப்லெட்டுகளும் பின்பக்கம் ஆட்டோ போக்கஸ் கொண்ட 5எம்பி கேமராவைக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஐபேட் மினி 1.2எம்பி முகப்புக் கேமராவையும் புதிய ஐபேட் 3 ஒரு விஜிஎ முகப்புக் கேராவையும் கொண்டிருக்கிறது.

சேமிப்பைப் பொருத்தவரை ஐபேட் மினி 8ஜிபி, 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய அளவுகளில் வருகின்றன. ஆனால் புதிய ஐபேட் 3 டேப்லெட் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய 3 அளவுகளில் வருகிறது. மேலும் புதிய ஐபேட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐபேட் மினி 512எம்பி ரேமைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஐபேட் மினி வைபை வசதி 3ஜி அல்லது 4ஜி செல்லுலர் வயர்லஸ் இன்டர்நெட் வசதி போன்றவற்றுடன் வருகிறது. ஆனால் புதிய ஐபேட் 3 டேப்லெட் 3ஜி இணைப்பு வசதியை மட்டுமே கொண்டுள்ளது. இதில் 4ஜி வசதி இல்லை.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளையும் மற்றும் சம அளவிலான செயல் திறனையும் கொண்டிருக்கின்றன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்