அடுத்து வருகிறது ஆப்பிள் ஐபேட் மினி!

Posted By: Karthikeyan
அடுத்து வருகிறது ஆப்பிள் ஐபேட் மினி!

சர்வதேச கெட்ஜெட் சந்தையில் புதிதாக வரும் சாதனங்களைப் பற்றி அவை வருவதற்கு முன்பே ஏராளமான வதந்திகள் பரவிவிடும். அத்தகைய புதிய வதந்தி என்னவென்றால் ஆப்பிள் தனது புதிய ஐபேட் மினி என்ற சாதனத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது என்ற செய்தியை சாம்சங் கசியவிட்டிருக்கிறது.

இணையதளத்தில் வருகின்ற தகவல்களின்படி ஆப்பிள் வரும் மே மாதத்திற்கு முன் தனது ஐபேட் 3யை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த ஐபேட் மினியை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருக்கிறது என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

கடந்த காலங்களில் ஆப்பிள் தனது 55 மில்லியன் ஐபேடுகளை இதுவரை விற்று இருக்கிறது. இந்த புதிய ஐபேட் மினி 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே தொடுதிரை வசதி கொண்டிருப்பதால் இதை விரல்களைக் கொண்டு இயக்குவது மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த ஐபேட் மினி அமேசான் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் சாம்சங்கின் பாதுகாப்பு ஆவணம் கூறும் போது ஆப்பிள் தனது ஐபேட்4 மற்றும் ஐபேட்5 போன்றவற்றிற்கு ஐபிஎஸ் டிஸ்ப்ளேக்கு பதிலாக அமோலெட் டிஸ்ப்ளேயைப் பயன்படுத்த இருக்கிறது என்று கூறுகிறது.

மேலும் இந்த ஐபேட் மினி டூவல் கோர் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. அதுபோல் ஆப்பிளின் 5வது வெர்சன் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெயர் மினியாக இருந்தாலும் இது ஒரு அதிக சக்தி வாய்ந்த சாதனம் ஆகும்.

வெளி ஆடியோ சப்போர்ட்டிற்காக இந்த மினி 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கைக் கொண்டுள்ளது. எவ்வளவு வதந்திகள் வந்தாலும் ஐபேட் மினியைப் பற்றி இன்னும் ஆப்பிள் வாய் திறக்கவில்லை. மெய்யா பொய்யா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot