ஆன்லைன் விற்பனையில் ஐபேட் மினி!

ஐபேட் மினி பற்றிய செய்திக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இங்கே ஐபேட் மினி டேப்லட்டின் ஆன்லைன் விற்பனை விஷயம் ஓர் சிறப்பான தகவலாக இருக்கும். இந்த டேப்லட் 7.9 இஞ்ச் திரை அளவினையும், தெளிவான தகவல்களையும் சிறப்பான முறையில் வழங்கும். 9.7 இஞ்ச் அளவு கொண்ட ஐபேடிற்கு அடுத்தபடியாக, ஐபேட் மினி டேப்லட் குட்டித் திரையுடன் வழங்கப்படுகிறது.
3வது ஜெனரேஷன் ஐபேட் டேப்லட்டினை விட, 23 சதவிகிதம் மெல்லிய கவர்ச்சிகரமான தோற்றத்துடனும், 53 சதவிகிதம் இலகு எடை கொண்டதாகவும் நியூ ஐபேட் இருந்தது. இதை தொடர்ந்த அடுத்ததாக வெளியாகி இருக்கும் ஐபேட் மினி டேப்லட் ஐசைட் கேமராவில் தெளிவான காட்சிகளை வழங்குகிறது.
இந்த குட்டி ஐபேட் மினி 3 வெர்ஷன் மெமரி மாடல்களை கொண்டதாக இருக்கும். இதன் 16 ஜிபி வெர்ஷன் ஐபேட் மினி மாடல் ஆன்லைனில் 26,990 விலையிலும், 32 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 34,990 விலையிலும் மற்றும் 64 ஜிபி வெர்ஷன் மெமரி வசதி கொண்ட மாடல் ரூ. 43,490 விலையினையும் கொண்டதாக இருக்கும். இப்படி இந்த ஐபேட் மினி டேப்லட் ஆன்லைன் விற்பனையில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications