ஆப்பிள் ஐபேட் மினி இந்தியாவில் விற்பனை!

Posted By: Staff
ஆப்பிள் ஐபேட் மினி இந்தியாவில் விற்பனை!

எதிர்பார்த்தபடியே அப்பிளின் ஐபேட் மினிக்கான விற்பனை இந்தியாவில் தொடங்கியது. ஆன்லைன் மட்டுமல்லாது விற்பனை நிலையங்களிலும் இந்த நான்காம் தலைமுறை சாதம் கிடைக்கிறது.

 

இப்பொழுது இந்த ஐபேட் மினியின் 16ஜிபிக்கான விலை ரூ.21,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி மற்றும் 64 ஜிபியின் விலைகள் முறையே, ரூ.27,900 மற்றும் ரூ.33,900.

 

இந்த புதிய சாதனம் நானோ மற்றும் மைக்ரோ என்ற சிம் அமைப்புகளில் கிடைக்கிறது. இதன் விலைகள் மட்டும் சற்று வேறுபடும்.

 

ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ஐபேட் மினியை சண்ஜோஸில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.

 

கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த ஐபேட் மினி கிடைக்கிறது. இதன் சில நுட்பக்கூறுகளாவன,

 

  • 7.9 அங்குல திரை,

  • HD கேமரா,

  • 10 மணிநேர பேட்டரி,

  • நான்காம் தலைமுறை ப்ராசெசர்,

  • A6X chip.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot