Home
Computer

அக்டோபரில் ஐபேட் ஏர் 2, ஐபேட் மினி 3 வெளியாகிறது, ஆப்பிளின் புதிய வரவு குறித்து பார்ப்போமா

By Meganathan

நம்ம ஊரில் சினிமா நடிகர்களை பற்றி நிறைய வதந்திகளை கேள்வி பட்டிருப்போம், ஆனா வெளிநாடுகளில் ஆப்பிள் பற்றி நிறைய வதந்திகள் வெளியாகிட்டு இருக்கின்றது. ஆமாங்க இதற்கு முன் ஆப்பிள் ஐபோன் 6 பற்றி நிறைய வதந்திகளை சந்திச்சு கடைசியாக ஐபோன் 6 வெளியாகிவிட்டது.

#1

#1

சக்திவாய்ந்த பிராசஸர் கிராபிக்ஸ் திரையை மேலும் யதார்த்தமாக காட்டும். புதிய ஐபோன்களில் ஏ8 சிப்செட் 64 பிட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பது வேகமான செயல்திறனுக்கு வழிவகுக்கும்.

#2

#2

ஆப்பிள் ஐபோன் 6 போலவே புதிய ஐபேட் வகைகளிலும் பெரிய டிஸ்ப்ளே எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த டேப்ளட் 12 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

#3

#3

கடந்தாண்டு ஐபோன் 5 எஸ் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட டச் ஐடி ஸ்கேனரை ஆப்பிள் நிறுவனம் ஐபேட் டேப்ளட்களிலும் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

#4

#4

இந்த காலத்தில் எல்லா டேப்ளட் வகைகளிலும் கேமரா மேம்படுத்தப்பட்டு வருவதால் புதிய ஐபேட் டூயல் கேமராவுடன் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

#5

#5

கூகுளின் வேலட் சேவைக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ப்ளே இணைய பணப்பை போன்று செயல்படுகின்றது.

மீண்டும் ஆப்பிள் பற்றி வதந்திகள் வெளியாகியிருக்கு, இப்ப ஐபோன் இல்லைங்க, ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி 3 குறித்து சில வதந்திங்க இணையத்தை வளம் வந்த வன்னம் உள்ளது.

அந்த வகையில் ஐபேட் ஏர் 2 இதற்கு முன் வெளியான ஐபேட் மாதிரியான தோற்றத்திலேயே இருக்கும் என்றும் டச் ஐடி ஸ்கேனர் மற்றும் டிஸ்ப்ளேவை பொருத்த வரை 7.9 இன்ச் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வகை டேப்ளட்களை அக்டோபர் மாதம் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் புதிய ஆப்பிள் பற்றிய சுவார்ஸ்யமான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்க

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X