இந்தியா: 27-இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளேவுடன் ஆப்பிள் ஐமேக் ப்ரோ அறிமுகம்.!
யுஎஸ்பி-3 போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் 4.1, ஹெச்.டி. கேமரா, தண்டர்போல்ட் 3 போர்ட், ஈத்தர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐமேக் ப்ரோ கணினியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதன்பின்பு இந்த சாதனம் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் ஐமேக் ப்ரோ சாதனத்தில் 4மைக்ரோபோன் மற்றும் அசத்தலான பீம்ஃபோமிங் தொழில்நுட்பம் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் 1080 பிக்சல் ஃபேஸ் டைம் ஹெச்.டி. கேமரா, மேம்படுத்தப்பட்ட லோ-லைட் செயல்திறன் மற்றும் ஸ்பீக்கர்கள் 50 சதவிகிதம் வரை அதிக ஒலியை வழங்கும் திறமையைக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆப்பிள் ஐமேக் ப்ரோ சாதனம்.

டிஸ்பிளே:
ஆப்பிள் ஐமேக் ப்ரோ சாதனம் பொறுத்தவரை 27-இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 5கே, (5120x2280) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது. மேலும் இந்தியாவில் 8-கோர் பிராசஸர் கொண்ட மாடல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2666 மெகாஹெர்ட்ஸ்:
இந்த புதிய ஐமேக் ப்ரோ சாதனத்தில் 2666 மெகாஹெர்ட்ஸ் 32ஜிபி ரேம் மற்றும் 1000ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக ரேம் மற்றும் மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது இந்த சாதனம்.

இணைப்பு ஆதரவுகள்:
யுஎஸ்பி-3 போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் 4.1, ஹெச்.டி. கேமரா, தண்டர்போல்ட் 3 போர்ட், ஈத்தர்நெட் போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ:
இந்த சாதனத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உயர்-ரக புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது, அதவாது
4கே மற்றும் 8கே வீடியோக்களை மிக அருமையாக எடிட் செய்ய முடியும்.

ஸ்பேஸ் கிரே ஃபினிஸ்:
ஸ்பேஸ் கிரே ஃபினிஸ், மேஜிக் கீபோர்டு, மேஜிக் மவுஸ் ஆப்ஷனல் மேஜிக் டிராக்பேட் போன்றவை ஆப்பிள் ஐமேக் ப்ரோ சாதனத்துடன் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விலை:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐமேக் ப்ரோ விலை இந்தியாவில் ரூ.4,15,000 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு
அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.


Click it and Unblock the Notifications