Home
Computer

ஆப்பரை அள்ளித்தரும் ஆப்பிள் - சிட்டி பேங்க் கூட்டணி!

ரூ10,000 வரை கேஷ்பேக் ஆப்பரை அறிவித்துள்ள இந்த கூட்டணி, ஜூன் 11 முதல் ஜூலை 31 வரை இந்த ஆப்பரை வழங்கவுள்ளது.

By Gizbot Bureau

ஆப்பிள் இந்தியா நிறுவனம் சிட்டி பேங்க் உடன் இணைந்து தனது தயாரிப்புகளான ஐபாட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் மேக்புக் போன்றவற்றிற்கு கேஸ்பேக் ஆப்பர்களை அள்ளி வழங்கவுள்ளது. ரூ10,000 வரை கேஷ்பேக் ஆப்பரை அறிவித்துள்ள இந்த கூட்டணி, ஜூன் 11 முதல் ஜூலை 31 வரை இந்த ஆப்பரை வழங்கவுள்ளது.

ஆப்பரை அள்ளித்தரும் ஆப்பிள் - சிட்டி பேங்க் கூட்டணி!

இந்த ஆப்பரானது சிட்டி கார்பொரேட் கார்டுகளை தவிர்த்து, இந்தியாவில் வழங்கிய அனைத்து சிட்டி பேங்க் கிரிடிட் கார்டுகளுக்கும் பொருந்தும். ஈ.எம்.ஐ / ஈ.எம்.ஐ இல்லா பரிமாற்றங்களுக்கு கிடைக்கும் இந்த கேஷ்பேக் ஆப்பர் ஒரு கார்டில் ஒரு பொருளுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த கேஷ்பேக் பணம் , பொருளை வாங்கிய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.


இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆப்பர் படி, அனைத்து வகையான மேக்புக்களுக்கும் ரூ10,000-ம், அனைத்து வகை ஐபாட்களுக்கும் ரூ5,000-ம், க்யூபர்டினோ ஜெயிண்டால் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்கப்படும் அனைத்து வகை ஆப்பிள் வாட்ச்களுக்கு ரூ5,000-ம் கேஷ்பேக் வழங்கப்படவுள்ளது. சிட்டி பேங்க கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கப்படும் ஆப்பிள் பென்சிலுக்கு ரூ1,000 கேஷ்பேக் ஆப்பர் கிடைக்கும்.

ஆப்பரை அள்ளித்தரும் ஆப்பிள் - சிட்டி பேங்க் கூட்டணி!

தற்போது இந்த அனைத்து வகை பொருட்களின் துவக்க விலையைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். சிட்டிபேங்க் ஆப்பர் வழங்கிய பின்பு, துவக்க நிலை மேக்புக் ஏர்-ன் விலை ரூ67,200ஆக குறைந்துள்ளது. அதேநேரம் துவக்க நிலை 5ம் தலைமுறை ஐபாட்-ஐ ரூ23,000க்கு வாங்க முடியும்.
ஆப்பரை அள்ளித்தரும் ஆப்பிள் - சிட்டி பேங்க் கூட்டணி!

ஆப்பிள் வாட்சுகளை பொறுத்தவரை, சிட்டி ஆப்பருக்கு பின்பு விலை ரூ18,950 எனவும், ஆப்பிள் பென்சிலின் விலை ரூ6,600ஆகவும் குறைந்துள்ளது.
இந்த ஆப்பர் இந்தியாவில் உள்ள ஆப்பிள் சில்லறை விற்பனை மையங்களில் மட்டுமே கிடைக்கும். அதன் பட்டியலை https://www.online.citibank.co.in/portal/Standalone/June18/pdf/apple-products-tnc.pdf இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் இதற்கான பணப்பரிமாற்றங்களை Plutus/Pine Labs POS கருவிகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த ஆப்பரை வேறு எந்த சிட்டி பேங்க் ஆப்பருடன் இணைத்து பயன்படுத்த முடியாது.
Best Mobiles in India

English summary
Apple, Citibank Partner to Offer Up to Rs. 10,000 Cashback on MacBooks, iPads, and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X