ஆப்பிள் 10.5-இன்ச் ஐபாட் ப்ரோ, ஐமேக், மேக்புக் இந்தியாவில் அதிரடி விற்ப்பனை.!

By Prakash
|

ஆப்பிள் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் ஐபாட் ப்ரோ வரிசையானது புதுபிக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் புதிய 10.5-இன்ச் மற்றும் 12.9-இன்ச் ஐபாட் ப்ரோ மாடல்களை அறிமுகப்படுத்தியது, மேலும் ஐமேக் மற்றும் மேக்புக் போன்ற சாதனங்களையும் சிறந்த திறமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது இந்த சாதனங்கள் அனைத்தும் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் அனைத்தும் புதிய அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவை எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

 ஆப்பிள் ஐபாட் ப்ரோ :

ஆப்பிள் ஐபாட் ப்ரோ :

ஆப்பிள் ஐபாட் ப்ரோ பொறுத்தமட்டில் 10.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (2224-1668) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் அடுத்தது 12.9அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே (272-2048) வீடியோ பிக்சல் கொண்டவை. இவை அல்ட்ராலொவ் பிரதிபலிப்புடன் கூடிய புதிய ட்ரூ டோன் பேனலைக் கொண்டுள்ளன.

ஆப்பிள் ஐபாட் ப்ரோ விலை:

ஆப்பிள் ஐபாட் ப்ரோ விலை:

10.5அங்குல முழு எச்டி பொதுவாக பல்வேறு நினைவகங்களில் வருகிறது, மேலும் 64ஜிபி கொண்ட ஐபாட் ப்ரோவின் விலை ரூ.63,900 ஆக உள்ளது, 256ஜிபி நினைவகம் கொண்ட ஜபாட் ப்ரோவின் விலை ரூ.71,900ஆக உள்ளது. 512ஜிபி நினைவகம் கொண்ட ஜபாட் ப்ரோவின் விலை ரூ.87,900ஆக உள்ளது. மேலும் 12.9-இன்ச் ஜபாட் ப்ரோ பொருத்தவரை பல்வேறு விலை அம்சங்களில் கிடைக்கிறது.

12-இன்ச் மேக்புக்:

12-இன்ச் மேக்புக்:

12-இன்ச் மேக்புக் பொதுவாக 1.6ஜிகாஹெர்ட்ஸ் கோர் ஐ5 செயிலி கொண்டுள்ளது, 256ஜிபி நினைவகம் கொண்ட மேக்புக் ப்ரோ விலை பொருத்தவரை ரூ.1,04,800 ஆக உள்ளது. அதன்பின் 512ஜிபி நினைவகம் கொண்ட மேக்புக் ப்ரோ விலை பொருத்தவரை ரூ.1,47,900 ஆக உள்ளது.

13-இன்ச் மேக்புக்:

13-இன்ச் மேக்புக்:

13-இன்ச் மேக்புக் ப்ரோ பொருத்தவரை இருவேறு நினைவகங்களில் வருகிறது, 256ஜிபி நினைவகம் கொண்ட மேக்புக் ப்ரோ விலை பொருத்தவரை ரூ.1,47,900 ஆக உள்ளது. அதன்பின் 512ஜிபி நினைவகம் கொண்ட மேக்புக் ப்ரோ விலை பொருத்தவரை ரூ.1,64,100 ஆக உள்ளது.

ஐமேக்:

ஐமேக்:

ஐமேக் பொதுவாக 2.3ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் ஐ5 செயல்திறனைக் கொண்டுள்ளது. மேலும் கிராபிக்ஸ் 640 இவற்றில் இடம்பெற்றுள்ளது, 21-இன்ச் டிஸ்பிளே கொண்ட இக்கருவியின் விலை ரூ.1,07,900ஆக உள்ளது. மேலும் 27-இன்ச் கொண்ட ஐமேக்-ன் விலை ரூ.1,48,900ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Apple 10 5 inch iPad Pro iMacs and MacBook goes on sale today in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X