அனைத்து நவீன வசதிகளுடன் புதிய டேப்லெட்!

Posted By: Karthikeyan
அனைத்து நவீன வசதிகளுடன் புதிய டேப்லெட்!

சமீபத்தில் ஆண்டி பேட் ப்ரோ என்ற புதிய டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டேப்லெட்டின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதன் முக்கிய அம்சங்களைப் பார்க்கும் போது அவை அமர்க்களமாக இருக்கின்றன.

இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இந்த டேப்லெட் மல்டி டச் வசதி கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1024 X 600 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. கேமராவைப் பொருத்தமட்டில் இந்த டேப்லெட் 2 மெகா பிக்சல் கொண்ட முகப்பு கேமராவையும் அதே நேரத்தில் 0.3 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமராவையும் கொண்டுள்ளது.

சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த ஆண்டி டேப்லெட் 16 ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. இந்த மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இதன் ரேம் 512 எம்பி அளவைக் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்றம் மற்றும் இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் வைபை, எச்டிஎம்ஐ போர்ட், ஹெட்போன் அவுட் மற்றும் மைக்ரோபோன் இன், யுஎஸ்பி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளை இந்த டேப்லெட் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக இந்த டேப்லெட் மின் திறனிற்காக 3600 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 200x125x13 மிமீ ஆகும். இதன் எடை 374 கிராம் மட்டுமே. மேலும் இந்த ஆண்டி டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதன் சிபியு 1 ஜிஹெர்ட்ஸ் ஆகும். இந்த டேப்லெட் க்ளோசி வெள்ளை நிறத்தில் வருகிறது.

இந்த ஆண்டி பேட் டேப்லெட் ஆன்ட்ராய்டு சந்தையின் ஒரு சில வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது விஷயமாக கூகுளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த டேப்லெட்டில் ஏராளமான விளையாட்டுகள் உள்ளன. அதுபோல் சமூக வளைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் லாக் இன் வசதிகள் உள்ளன. மேலும் இந்த டேப்லெட் கெஜார் வசதி கொண்டுள்ளதால் அப்ளிகேசன்களை பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிதாக இருக்கும். இந்த ஆன்டி டேப்லெட்டின் விலை ரூ.15,000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்